பில்லியன்களை குவிக்கும் உலகப் பணக்காரர்கள்: வெளியான ஆய்வறிக்கை

Report Print Arbin Arbin in பொருளாதாரம்
114Shares

உலகின் பணக்கார ஒரு சதவிகிதத்தினர் 2030ஆம் ஆண்டில் மூன்றில் இரண்டு மடங்கு சொத்தைக் கொண்டிருப்பர் என்று தி கார்டியன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "உலகம் முழுவதும் சமத்துவமின்மை என்பது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. உலகின் பணக்கார ஒரு சதவிகிதத்தினர் 2030ஆம் ஆண்டில் மொத்த சொத்தில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டிருப்பர்.

ஒரு சதவிகித பணக்காரர்களிடம்தான் சொத்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை உலகத் தலைவர்கள் கவனிக்க வேண்டும்.

சமத்துவ நிலையை உருவாக்க அடுத்து வரும் ஆண்டுகளில் இதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

2008ஆம் ஆண்டில் ஒரு சதவிகித பணக்காரர்களின் சொத்து உயர்வு ஆண்டுக்கு 6 சதவிகிதமாகவும், 99 சதவிகித மக்களின் சொத்து உயர்வு 3 சதவிகிதமாகவும் மட்டும்தான் இருந்தது" என்று கூறியுள்ளது.

அண்மையில் வெளியான ஆக்ஸ்ஃபோம் ஆய்வறிக்கை, 2016-17ஆம் ஆண்டில் உலகின் ஒரு சதவிகித பணக்காரர்களின் சொத்து மதிப்பு 82 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகக் கூறியுள்ளது.

ஒரு சதவிகித பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஒரே நிதியாண்டில் ரூ.8,482 லட்சம் கோடியிலிருந்து ரூ.8,968 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

அதே சமயத்தில் 5௦ சதவிகித ஏழை மக்கள் வெறும் ௦.96 சதவிகித சொத்தினை மட்டுமே கொண்டுள்ளனர்.

சர்வதேச அளவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் சமத்துவமின்மை குறித்து இதுபோன்ற பல்வேறு ஆய்வுகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்