கேட்பாரற்று குவிந்து கிடக்கும் 11,300 கோடி ரூபாய்: எங்கே தெரியுமா?

Report Print Arbin Arbin in பொருளாதாரம்

இந்திய ரிசர்வ் வங்கி தகவலின்படி, ரூ.11,300 கோடி பணம் இந்திய வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கிறது என தெரிய வந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் சேர் புரொபசர் சரண் சிங், நாட்டின் பல்வேறு வங்கிகளில் பல கோடி ரூபாய் பணம் கேட்பாரற்று கிடக்கின்றது என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

அதில், இது பினாமியாகவோ, கணக்கில் வராத பணமாகவோ இருக்கலாம். வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949 பிரிவு 26ன் படி, 10 ஆண்டுகளாக செயல்படாமல் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த விவரங்களை, ஒவ்வொரு நிதியாண்டின் இறுதிக்கு பின், 30 நாட்களுக்குள் ரிசர்வ் வங்கிகளுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

அதேசமயம் 10 ஆண்டுகள் செயல்பாடற்ற நிலைக்கு பின்பும், வங்கி கணக்கு உரிமையாளர் பணத்தை பெற விரும்பினால், பிரிவு 26Aன் படி, வங்கிகள் திரும்ப அளிக்க வேண்டும்.

ஸ்டேட் ஆப் இந்தியா வங்கியில் ரூ.1,262 கோடியும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.1,250 கோடியும், இதர தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.7,040 கோடியும் கேட்பாரற்று உள்ளன.

ஆக்சிஸ், டிசிபி, எச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, இண்டஸ் இண்ட், கோடக் மஹிந்திரா, யெஸ் ஆகிய 7 தனியார் வங்கிகளில் ரூ.824 கோடி பணம் கேட்பாரற்று உள்ளது. இதர 12 தனியார் வங்கிகளில் ரூ.592 கோடி உள்ளது.

ஒட்டுமொத்தமாக தனியார் வங்கிகளில் மட்டும் ரூ.1,416 கோடி கேட்பாரற்று இருக்கிறது. இதில் அதிகபட்சமாக ஐசிஐசிஐ ரூ.476 கோடியும், கோடக் மஹிந்திராவில் ரூ.151 கோடியும் உள்ளன.

25 வெளிநாட்டு வங்கிகளில் ரூ.332 கோடி உள்ளது. எச்.எஸ்.பி.சி வங்கியில் மட்டும் ரூ.105 கோடி கேட்பாரற்று உள்ளது என்று சரண் சிங் கூறியுள்ளார்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்