பணக்காரர்கள், நடுத்தர மக்கள், ஏழை எளியோர் என அனைத்து தரப்பு மக்களும் நிறைந்த நாடு தான் இந்தியா.
கடந்த 2017-ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார வளர்ச்சி குறித்து ஹாக்ஸ்ஃபோம் என்ற சர்வதேச அங்கீகார பெற்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் படி 73 சதவிகித செல்வம் 1 சதவிகிதம் பேரிடம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இது தவிர 67 கோடி மக்களின் வருமான முன்னேற்றம் 1% மட்டுமே எனவும் கூறுகிறது. இதைப்பற்றி சர்வதேச தலைவர்களுடன் கலந்தாய்வு மேற்கொள்ள போவதாகவும் ஹாக்ஸ்ஃபோம் அமைப்பு கூறிவருகிறது.
மேலும் 3.7 பில்லியன் மக்களின் தினசரி வருமானத்தின் மூலம் எந்த ஒரு பொருளாதார வளர்ச்சியும் இல்லை என்றும் தெளிவாக கூறியது.
இதன் காரணியை மேற்கொண்டு பார்த்தால் 37% மக்கள் மட்டுமே பணக்காரர்களாகவும், வசதியாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பது காணப்படுகிறது. மேலும் பிரபல ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரின் வருட வருமானத்தை கிராமப்புற சாமானியன் சம்பாதிக்க 941 வருடங்கள் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இயல்பு வாழ்க்கை வாழும் மனிதன் 50 வருடம் பணியாற்றினால் தான் அதிக ஊதியம் பெரும் ஒருவரின் 17 நாள் வருமானத்தை பெற முடியுமென்று இந்த ஆய்வில் கூறப்படுகிறது.