நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் ஆறு பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டவுள்ளதாக நிதி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், பருப்பு, கருவாடு, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதி வரி குறைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்.
இறக்குமதி வரி குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பிலான விபரங்கள்..
பொருட்கள் | தற்போதைய வரி (1KG ரூபா) | புதிய வரி (1KG ரூபா) | குறைக்கப்பட்ட வரி (1KG ரூபா) |
நெத்தலி | 11 | 1 | 10 |
உருளைக்கிழங்கு | 40 | 1 | 39 |
பெரிய வெங்காயம் | 40 | 1 | 39 |
பருப்பு (முழுமையானது) | 10 | 1 | 09 |
வகைப்படுத்தப்பட்ட பருப்பு | 15 | 3 | 12 |
கருவாடு | 102 | 52 | 50 |
பாம் ஓயில் / ஏனைய மரக்கறி எண்ணெய் | 110 | 95 | 15 |
பாம் ஓலென் | 115 | 100 | 15 |
பாம் ஸ்ரீயன் | 110 | 95 | 15 |
சுத்தம் செய்யப்பட்ட பாம் ஓயில் | 135 | 110 | 25 |
சுத்தம் செய்யப்படாத மரக்கறி எண்ணெய் | 130 | 105 | 25 |
சுத்தம் செய்யப்படாத பாம் கேனல் ஓயில் | 130 | 105 | 25 |
சுத்தம் செய்யப்படாத பாம் கேனல் ஓயில் | 145 | 110 | 35 |
தேங்காய் எண்ணெய் சுத்தம் செய்யப்படாத மற்றும் சுத்தம் செய்யப்பட்ட | 130 | 105 | 25 |