யூரோவை நாணயமாக ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு!!..

Report Print Thayalan Thayalan in பொருளாதாரம்
யூரோவை நாணயமாக ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு!!..
34Shares

யூரோவை நாணயமாக ஏற்றுக் கொண்டுள்ள நாடுகளின் பொருளாதாரம் செப்டம்பர் மாதம் வரையிலான மூன்றாம் காலாண்டு பகுதி நிறைவில் 0.6 சதவீதத்தினால் வளர்ச்சி அடைந்துள்ளதாக யூரோ புள்ளிவிபர அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யூரோ புள்ளிவிபர அலுவலக தகவல்களின் பிரகாரம் கடந்த 12 மாதங்களில் வளர்ச்சி வீதம் 2.5 ஆக இருந்ததாக கூறப்படுகின்றது. அதேவேளை கடந்த செப்டம்பர் மாதம் யூரோ வலய பகுதியில் வேலைவாய்ப்பின்மையானது 8.9 சதவீதமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது கடந்த ஒன்பது வருடங்களில் மிகக் குறைவான எண்ணிக்கை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐரோப்பிய மத்திய வங்கி கடந்த மாதம் யூரோ வலயத்தை சேர்ந்த 19 நாடுகளுக்குமான 2017 ஆம் ஆண்டின் வளர்ச்சிக் கணிப்பை 2.2 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்