இலங்கை குடும்பத்தினரின் மாத வருமானம் அதிகரித்துள்ளதாக தகவல்

Report Print Raju Raju in பொருளாதாரம்

கடந்த 2016-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இலங்கை குடும்பங்களின் சராசரி மாத வருவாய் குறித்த மதிப்பீட்டு விபரங்களை அந்நாட்டின் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2013லிருந்து 2016 வரை இலங்கை குடும்பம் ஒன்றின் மாத வருவாய் 15.8 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதவீத கணக்குபடி 43,370 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

அதன்படி 2013-ல் 45,787-ஆக இருந்த மாத வருவாய் 2016-ல் சராசரியாக 62,237-ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் வருமானத்தில் ஏற்றதாழ்வு கடந்த 2013-ல் 0.48 சதவீதமாக இருந்த நிலையில், 2016-ல் 0.45-ஆக குறைந்துள்ளது.

20 சதவீத செல்வந்தர்களின் வருமானம் 52.8 சவீதத்திலிருந்து 50.8 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதும், 20 சதவீத ஏழைகளின் வருமானம் 10.6 சதவீதத்திலிருந்து 12.0 சதவீதமாக உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இலங்கையின் மூன்று நிலையாக பார்த்தால் கிராமத்தின் குடும்பம் ஒன்றின் வருவாய் 58 ஆயிரத்து 137 ரூபாயாகவும், நகர குடும்பத்தின் வருவாய் 88 ஆயிரத்து 692 ரூபாயாகவும், தோட்டபுற குடும்பத்தின் வருவாய் 34 ஆயிரத்து 804 ரூபாயாகவும் உள்ளது.

இலங்கையின் ரூபாய் மதிப்பு கடந்த 2016-ஆம் ஆண்டின் இறுதியில் வீழ்ச்சியடைந்தது, அதே சமயம் உலகளாவிய பொருட்கள் மற்றும் ஆற்றல் விலைகளும் வீழ்ந்ததால் அது உள்நாட்டு பணவீக்கத்தின் தாக்கத்தை தாமதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்