பிரிட்டன் பவுண்டு மதிப்பு வீழ்ச்சி: சரியுமா சர்வதேச பொருளாதாரம்?

Report Print Fathima Fathima in பொருளாதாரம்
86Shares

நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, ஆகஸ்ட் மாதத்­தோடு ஒப்­பி­டும் போது, செப்­டம்­ப­ரில் பிரிட்­ட­னின் சில்­லரை வணி­கம், 0.8 சத­வீ­தம் சரிந்­துள்­ளது.

இதற்கு முக்­கிய கார­ணம் பண­வீக்­கம். அதற்கு முக்­கி­ய­மாக பங்­க­ளித்­துள்­ளது, பவுண்டு ஸ்டெர்­லிங்­கின் மதிப்பு வீழ்ச்சி. மக்­களின் வாங்­கும் சக்தி, படிப்­ப­டி­யாக குறைந்­துள்­ளது.

மக்­கள், பல பொருட்­களை உட­ன­டி­யாக வாங்­கா­மல் தள்­ளிப் போடு­கின்­ற­னர் அல்­லது பொருட்­களின் விலை­யேற்­றத்­தால், அவர்­க­ளால் வாங்க முடி­யாத சூழல் ஏற்­பட்­டுள்­ளது. இவை இரண்­டுமே நல்­ல­தில்லை. எங்கோ கோளாறு ஏற்­பட்­டுள்­ளது என்­பதே இதற்கு அர்த்­தம்.

சில்­லரை வணிக வீழ்ச்­சி­யில் அதி­கம் பாதிப்­ப­டைந்­தது, சூப்­பர் மார்­கெட்­டு­களும், உண­வுப் பொருட்­கள் விற்­பனை செய்­யும் சந்­தை­களும், பெட்­ரோல், ‘பங்க்’குகளும் தான்.

கம்ப்­யூட்­டர் கேம்­கள், மொபைல் போன்­கள் மற்­றும் மடிக்­க­ணி­னி­களின் விற்­பனை அள­வும், செப்­டம்­ப­ரில் சரிந்­துள்ளன. அந்­நாட்­டின் பண­வீக்­கம் 3 சத­வீத அளவை தொட்­டுள்­ளது.

ஐந்து ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு பண­வீக்­கம் அதி­க­ரித்­துள்­ளது கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

சில்­லரை வணி­கத்­தில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்­சி­யும், பண­வீக்­க­மும், ஏன் இவ்­வ­ளவு துாரம் அதிர்ச்சி அலை­களை ஏற்படுத்த வேண்டும்?

முத­லில் பிரிட்­ட­னின் வர்த்­தக பாங்கை புரிந்து கொள்ள வேண்­டும். அந்­நாட்­டின் மொத்த வரு­வா­யில் தொழிற்சாலை­களின் பங்கு வெறும், 10 சத­வீ­தம் தான்.

சேவை துறை­யின் பங்­க­ளிப்பு 80 சத­வீ­தம். அந்­நாட்­டில் விற்­ப­னை­யா­கும் பெரும்­பா­லான பொருட்­கள், வெளிநாடுகளில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­பவை. அவற்­றின் விற்­பனை அதி­க­ரித்­தால் தான் பொரு­ளா­தா­ரம் உய­ரும்.

இந்­நி­லை­யில் சில்­லரை விற்­ப­னை­யில் ஏற்­பட்­டுள்ள சரிவு பொரு­ளா­தா­ரத்­துக்கு ஏற்­பட்­டு உள்ள பெரும் பின்னடைவு.

ஏன் இந்த பின்னடைவு ஏற்பட வேண்டும்?

அதற்கு பவுண்டு ஸ்டெர்­லிங்­கின் வீழ்ச்சி முக்­கி­ய­மான கார­ணம். 2016 ஜூனில் பிரிட்­டன் ‘பிரெக்­சிட்’ முடிவை எடுத்தது.

இப்­போது பிரிட்­டன் பிர­த­ம­ராக இருக்­கும் தெரசா மே இந்த பிரி­யும் முடிவை செயல்­ப­டுத்த முனைந்து வரு­கி­றார். அதில் எண்­ணற்ற சிக்­கல்­கள், உடன்­பா­டு­கள், குறை­கள், ஏற்ற இறக்­கங்­க­ளைச் சந்­தித்து வரு­கி­றார்.

இத்­த­கைய தடு­மாற்­ற­மான சூழ­லில் பவுண்டு ஸ்டெர்­லிங் தொடர்ந்து அடி­வாங்கி வரு­கிறது. சில்­லரை விற்­பனை சரிவு விப­ரம் வெளி­யா­ன­வு­டன் ஒரு யூரோ­வுக்கு இணை­யான பவுண்­டின் மதிப்பு, மேலும் சரிந்து போனது.

ஒரு யூரோவை வாங்­கு­வ­தற்கு, 89.90 பென்ஸ் போதும். அதே போல், அமெ­ரிக்க டால­ருக்கு இணை­யா­க­வும், பவுண்­டின் விலை அரை சத­வீ­தம் குறைந்­தது. ‘பிரெக்­சிட்’ பொது ஓட்­டெ­டுப்­புக்கு முந்­தைய நிலை­யோடு ஒப்­பி­டும் போது, யூரோ­வுக்கு இணை­யான பவுண்­டின் மதிப்பு, 14 சத­வீ­தம்; அமெ­ரிக்க டால­ருக்கு இணை­யான பவுண்­டின் மதிப்பு, 10 சத­வீ­தம் குறைந்­துள்­ளது.

இதை­யெல்­லாம் விட முக்­கி­யம் பிரிட்­ட­னில் வாழ்­ப­வர்­களின் வாழ்க்கை நிலை, செல்வ நிலை படிப்­ப­டி­யாக குறைந்து வரு­வது அந்­நாட்டு மக்­க­ளுக்கு கவலை அளிக்­கிறது. அவர்­க­ளு­டைய வரு­வாய் குறைவு, விலை­வா­சியோ அதி­கம்.

இந்­நி­லை­யில் இங்­கி­லாந்து மத்­திய வங்கி, ‘வட்டி விகி­தங்­களில் மாற்­றம் கொண்டு வர வேண்­டிய தேவை ஏற்­ப­ட­லாம்’ என தெரி­வித்­தி­ருக்­கிறது. அதா­வது வங்­கி­யின் வட்டி விகி­தம் கூட்­டப்­ப­ட­லாம் என்­பது செய்தி.

இப்­படி செய்­தால் தொழிற்­க­டன்­களின் வட்டி விகி­த­மும், இதர கடன்­களின் வட்டி விகி­தங்­களும் உயர்ந்­து­வி­டும். அதனா­லும் அங்கே பாதிப்­பு­கள் தொட­ரும் வாய்ப்­புண்டு.

இதெல்­லா­வற்­றுக்­கும் அடிப்­படை கார­ண­மாக இருப்­பது ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருந்து வில­கும் முடிவு தானே? அதை ஏன் மீண்­டும் மறு­ப­ரி­சீ­லனை செய்­யக் கூடாது என்ற கருத்­தும் பிரிட்­ட­னில் முன்­வைக்­கப்­ப­டு­கிறது.

வரும் 2019க்குள் பிரிட்­டன், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் இருந்து முழு­மை­யாக பிரிய வேண்­டும். அதற்­குள் உலக பொரு­ளா­தா­ரத்தில் ஒரு பூகம்­பத்தை கிளப்பி விடா­மல் இருக்க வேண்­டும்.

மற்ற நாடுகளுக்கும் பரவுமா?

பவுண்­டின் மதிப்பு சரிவு என்­பது பண­வீக்­கம், வரு­வாய் பெருக்­க­மின்மை, சில்­லரை வர்த்­த­கத்­தில் உயர்­வின்மை என சக­ல­வி­த­மான இடர்­க­ளுக்­கும், ஆதி­யும் அந்­த­மு­மாக இருக்­கிறது. அதன் பாதிப்­பு­கள் பிரிட்­ட­னில் மட்­டும் இருக்க போவ­தில்லை. அது பிற நாடு­க­ளுக்­கும் பர­வக்­கூ­டிய தொற்­று­நோய்.

இத­னால் மொத்த ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­லும் பொரு­ளா­தார தேக்­க­நிலை ஏற்­பட்டு விட­லாமோ என்ற கேள்­வி­யும் எழுப்­பப்­ப­டு­கிறது.

பவுண்டு மதிப்பு சரிவால் சாதகம்
  • பிரிட்­டன் வரும் சுற்­றுலா பய­ணி­ய­ருக்கு, கொஞ்­சம் செலவு குறை­யும்
  • பிரிட்­ட­னில் முத­லீடு செய்­துள்ள வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, கொஞ்­சம் சிர­மம் குறை­யும்
  • பிரிட்­ட­னில் கல்வி பயி­லும் மாண­வர்­களின் செல­வு­கள் குறை­யும்
  • வெளி­நா­டு­களில், குறிப்­பாக, அமெ­ரிக்­கா­வில் முத­லீடு செய்­துள்ள பிரிட்­டிஷ் நிறு­வ­னங்­கள், கூடு­தல் லாபம் பார்க்­கும்.
பாதகம்
  • பிரிட்­ட­னுக்கு ஏற்­று­மதி செய்­யும், இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­கள் பாதிப்­ப­டை­யும். ஏனெ­னில், அவர்­க­ளு­டைய சரக்­குக்கு கிடைக்­கும் வரு­வாய் குறைந்து போகும். நாணய மாற்று மதிப்பு குறைந்து போவ­தால், லாபம் குறை­யும்
  • பிரிட்­ட­னில் இருந்து, அமெ­ரிக்க, ஐரோப்­பிய நாடு­க­ளுக்கு சுற்­றுலா செல்­வோர், கூடு­த­லாக செலவு செய்ய வேண்­டும்
  • பிரிட்­ட­னில் உள்ள, வெளி­நாட்டு பணி­யா­ளர்­களின் வரு­வா­யும், அதன் நாணய மாற்று மதிப்­பும் குறைந்து போவ­தால், அந்­நாட்­டில் வேலை செய்­வது, அவ்­வ­ளவு கவர்ச்­சி­க­ர­மாக இராது.

- Dina Malar

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்