பொருளாதார வளர்ச்சிக்காக மீண்டும் இலங்கைக்கு கிடைக்கும் மூன்றாம் கட்ட, ‘கடன்

Report Print Thayalan Thayalan in பொருளாதாரம்

இலங்கைக்கான மூன்றாம் கட்ட, ‘கடன் திட்டத்தின் கீழான’ நிதி உதவியை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தள்ளது.

கடன் நிதி உதவி திட்டத்தின் கீழ், மூன்றாம் கட்டமாக 168 மில்லியன் கடனை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக, நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழ், 168 மில்லியன் டொலர்களின் படி, இரண்டு தடவைகள் சர்வதேச நாணய நிதியம், கடன் வழங்கியுள்ளது.

அதையடுத்து, மூன்றாம் கட்ட நிதியுதவியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதிக்குள், இந்த தீர்மானம் குறித்து கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்