VODAFONE நிறுவனத்தின் புதிய சலுகை- OPPO நிறுவனத்தின் புதிய PHONE விரைவில்

Report Print Thayalan Thayalan in பொருளாதாரம்
VODAFONE நிறுவனத்தின் புதிய சலுகை- OPPO நிறுவனத்தின் புதிய PHONE விரைவில்

ரிலையன்ஸ் ஜியோ சலுகைகளுக்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் அறிவித்துள்ள புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 90 ஜிபி 4 ஜி டேட்டா ஆறு மாதங்களுக்கும், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.

ரூ.399க்கு அறிவிக்கப்படுள்ள புதிய திட்டம் சில வட்டாரங்களில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் தினமும் 1 ஜி.பி டேட்டா பெற முடியும். ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 திட்டங்களுக்கு போட்டியாக வோடபோனின் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வோடபோனின் ரூ.399 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 90 ஜி.பி 4 ஜி டேட்டா உள்ளிட்டவை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தற்சமயம் வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

OPPO நிறுவனத்தின் புதிய PHONE விரைவில்

சீன சிமாட்போன் நிறுவனமான ஒப்போ இந்தியாவில் புதிய சிமாட்போனை வெளியிட தயாராகி வருகிறது. அந் நிறுவனம் வெளியிட்டுள்ள ரீசரில் புதிய செல்ஃபி எக்ஸ்பெர்ட் சிமாட்போன் நவம்பர் 2 ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஒப்போ நிறுவனம் F5 சிமாட்போனை நவம்பர் 2 இல் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த சிமாட்போனில் 18:9 ஒஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் செல்ஃபி விருப்பதாரர்களுக்கு ஏற்ப்ப இது அமையப்பெற்றுள்ளது.

புதிய ஒப்போ சிமாட்போன் வெளியீட்டு அழைப்பிதழில் தலைசிறந்த கமரா கொண்டிருக்கும் என்ற தகவலை தெரிவித்துள்ளது. அதன் போஸ்டரில் “Capture the real you.” என்ற வாசகம் சிமாட்போனின் செல்ஃபி கமரா சிறப்பானதாக இருக்கும் என்பதை வெளியிட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்