பிரித்தானியாவில் வர்த்தக நடவடிக்கையில் சுற்றுலாத்துறை வரி பாரிய தாக்கம்!

Report Print Thayalan Thayalan in பொருளாதாரம்

பிரித்தானியா, வேல்ஸ் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் சுற்றுலாத்துறை வரி பாரிய தாக்கம் செலுத்தியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் புதிய வரியொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் வேல்ஸ் அமைச்சர்கள் தீர்மானித்து வருகின்றனர்.

இதன் மூலம் வேல்ஸுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் தங்குமிடத்துக்கு கட்டணம் அறவிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், புதிய வரியை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைக்கு வர்த்தகர்களும் தொழிற்றுறை நிறுவன அதிகாரிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

புதிய வரி அறிமுகப்படுத்துவதால், வேல்ஸுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படும் எனவும் வர்த்தகர்களும் தொழிற்றுறை அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்