இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம்!

Report Print Ajith Ajith in பொருளாதாரம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி முன்னேற்ற வழிகளில் சென்று கொண்டிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

வாசிங்டனில் நேற்று (07) வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திர பொருளாதார பார்வையில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, உள்நாட்டு உற்பத்தியின் சாதகப்போக்குடன் மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான இலங்கையின் உள்நாட்டு உற்பத்தித்துறையின் அதிகரிப்பை பொறுத்தவரையில், சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பு 5வீதமாக உள்ளது.

அத்துடன் இரண்டு வருடங்களுக்குமான நடைமுறைக்கணக்கு மீதி 1.5 ஆக எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த எதிர்பார்ப்புக்கள், உலக வங்கியின் எதிர்பார்ப்புக்களுடன் ஒப்பிடுகையில் சிறந்ததாக உள்ளன.

உலக வங்கியை பொறுத்தவரையில் 2016, 17 ஆகிய ஆண்டுகளுக்கான உள்நாட்டு உற்பத்தித்துறையின் வளர்ச்சி வீதம் 4.8ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தை, 2016ல் 7.6 வீதமாகவும் 2017ல் 7.7 வீதமாகவும் உலக வங்கி கணித்துள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments