திறைசேரியிலிருந்து 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

Report Print Malar in பொருளாதாரம்

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கென திறைசேரியிலிருந்து 1000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலைக்கு அத்தியாவசியமாக உள்ள 24 மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இது தொடர்பில் அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் திறைசேரியின் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மருந்துகளை வாங்குவது குறித்து பின்பற்றப்படும் நடைமுறைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி வலியுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்