பொருளாதார நெருக்கடி! சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் பெறும் இலங்கை

Report Print S.P. Thas S.P. Thas in பொருளாதாரம்

இலங்கை அரசாங்கம் சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொருளாதார சரிவும், கடன் நெருக்கடி குறித்தும் அண்மையில் நிதியமைச்சர் மங்கள சமரவீர சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.

குறிப்பாக, அடுத்த ஆண்டில் கடுமையான கடன் நெருக்கடியைச் சந்திக்கும் என்றும், 2019இல் 4.3 பில்லியன் ரூபா கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாகவும், அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளது. இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களுக்கான கொடுப்பனவுகளை கொடுத்துத் தீர்க்கவே, அரசாங்கம் இந்தக் கடனைப் பெறவுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

சீன அபிவிருத்தி வங்கி எட்டு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில், இந்தக் கடனை கொடுப்பதாக நிதியமைச்சின் அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக இலங்கைக்கு கடன் வழங்க நான்கு அனைத்துலக நிறுவனங்கள் முன்வந்திருந்தன. ஏனைய மூன்று நிறுவனங்களும், கடனை மூன்று ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்தன.

ஆனால் சீன அபிவிருத்தி வங்கி, எட்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளித்துள்ளது. இந்தக் கடன், 5.3 வீத வட்டியுடன் மீளச் செலுத்தப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறது சீன அபிவிருத்தி வங்கி.

இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் நிதியமைச்சின் அதிகாரி ஒருவர், இது ஒரு நல்ல வாய்ப்பு. மூன்று ஆண்டு விலக்குக் காலம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் ஐந்து ஆண்டுகளில், ஆண்டுக்கு இரண்டு தடவைகள் தலா 100 மில்லியன் ரூபா வீதம் கடனை திருப்பி செலுத்த முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...