இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி சதி நடவடிக்கை! ஹர்ச சந்தேகம்

Report Print Aasim in பொருளாதாரம்

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது சதி நடவடிக்கையாக இருக்கலாம் என்று இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

நேற்று மாலை தனது அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா இதை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நாணயச் சந்தையில் ரூபாவின் பெறுமதியை குறைக்கும் வகையில் வேண்டுமென்றே சந்தை நடவடிக்கைகளை சீர்குலைக்க முடியும்.

அரசாங்கத்தின் அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் யாராவது மூன்றாவது தரப்பு அவ்வாறு செய்திருக்கவும் கூடும்.

ஒரு சிலருக்கு நாட்டை விட சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரல் முக்கியமானது.

அவ்வாறானவர்கள் இதுபோன்ற சதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அது குறித்து நாங்கள் விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

அவ்வாறு யாரேனும் சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தால் அவர்களை கடுமையாக தண்டிக்கவும் பின்னிற்க மாட்டோம் என்றும் இராஜாங்க அமைச்சர் ஹர்ச டி சில்வா தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்