டொலருக்கு எதிராக வரலாறு காணாத வீழ்ச்சியை கண்ட ரூபாவின் பெறுமதி

Report Print Murali Murali in பொருளாதாரம்

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்க டொலருக்குகான இலங்கை ரூபாயின் விற்பனை பெறுமதி அதிக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி 158 ரூபா 69 சதமாக பதிவாகியுள்ளது. ஏற்றுமதியில் வளர்ச்சியின்றி இறக்குமதியில் தங்கியிருப்பதே ரூபாவின் வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

2010ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 114 ரூபாவாக காணப்பட்டது. எனினும், இன்றைய தினம் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 158 ரூபா 69 சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் பணவீக்க வீதத்தினை 4 முதல் 5 வீதமாக பேணுகின்ற போது நாணய பெறுமதி இறக்கத்தினை 2 முதல் 3 வீதமாக பேண முடியும் என மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...