கொரோனாவிற்கான ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருந்து என்ன விலை தெரியுமா? தலைமை அதிகாரி சொன்ன நல்ல செய்தி

Report Print Santhan in நோய்
853Shares

கொரோனாவிற்கான தடுப்பூசி ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இரண்டு டோஸ் கொரோனா மருந்துவிற்கான விலை என்ன என்பது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு உலகின் பல்வேறு நாடுகளும், தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

ஒரு சில நாடுகளில் தடுப்பூசியின் பரிசோதனை இறுதிகட்டத்தில் உள்ளது. இதனால் அடுத்த ஆண்டில் கொரோனாவிற்கான தடுப்பூசி கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா. எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் இன்னும் 3-4 மாதங்களில் கொரோனா தடுப்பு மருந்து இந்தியர்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் தற்போது வேக்சின் உற்பத்தி வேகமாக நடந்து வருகிறது. டிசம்பர் மாதத்திற்குள் வேக்சின் கிடைக்க வாய்ப்பு இல்லை.

எல்லாம் திட்டப்படி நடந்தால் அடுத்த வரும் பிப்ரவரி மாதத்திற்குள் வேக்சின் கிடைத்துவிடும். பின் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மக்களுக்கு வேக்சின் கொடுக்க முடியும். வயதானவர்கள், கர்ப்பிணிகள், முன்கள பணியாளர்கள் ஆகியோருக்கு வேக்சின் கொடுக்க முடியும். ஆனால் இதற்கு எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும்.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனையின் இறுதி முடிவுகள் மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல்களை பொறுத்து 2021 பெப்ரவரியில் சுகாதார பணியாளர்கள், முதியவர்களுக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைக்கலாம்.

பொதுமக்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கலாம். இதில் இரண்டு டோஸ் கொரோனா மருந்து அதிகபட்சம் 1000 என்ற விலையில் கிடைக்கும். அனைவருக்கும் 2024-ஆம் ஆண்டில் தடுப்பூசி கிடைத்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வயதானவர்களிடம் மிகச் சிறப்பாக செயல்படுவதை இதுவரை நிரூபித்து வருகிறது இந்த தடுப்பூசிகள் நீண்ட காலத்திற்கு உங்களைப் பாதுகாக்கப் போகிறதா என்பதை காலம் மட்டுமே சொல்லும்.

அதற்கு யாரும் பதிலளிக்க முடியாது. பெரிய புகார்கள், எதிர்வினைகள் அல்லது பாதகமான நிகழ்வுகள் எதுவும் இல்லை இந்திய சோதனைகளின் செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் திறன் முடிவுகள் ஒன்றரை மாதத்தில் வெளிவரும்.

இங்கிலாந்து அதிகாரிகளும் ஐரோப்பிய மருந்துகள் மதிப்பீட்டு நிறுவனமும் (ஈ.எம்.இ.ஏ) அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்தவுடன் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்திற்காக ஒப்புதல் கேட்கப்படும்.

முதலில் சுகாதார பணியாளர்கள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு கிடைக்கும். பாதுகாப்புத் தரவு வெளிவரும் வரை குழந்தைகள் இன்னும் சிறிது காலம் கொரோனா மருந்திற்காக காத்திருக்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்