கொரோனா வைரஸ் மரணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in நோய்

கடந்த மார்ச் மாதம் முதல் உலகின் பல பகுதிகளும் லாக் டவுன் செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தது கொரோனா வைரஸ்.

இந்த வைரஸ் காரணமாக நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுவந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானவர்கள் மரணித்துமுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வரை இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருட பிற்பகுதியில் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் ஆனது தற்போதுவரை பல நாடுகளில் தாக்கத்தை செலுத்தி வருகின்றது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சுமார் 3 கோடிகளை தாண்டியுள்ளது.

எனினும் இதுவரை இவ் வைரசினை தடுப்பதற்கான எந்தவொரு தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் பல நாடுகளிலும் கொரோனா வைரசினை சமாளித்து வாழ மக்கள் பழகிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்