கொரோனா வைரஸ் நோயாளிகளில் ஏற்படும் புதிய வகை சிக்கல்

Report Print Givitharan Givitharan in நோய்
69Shares

கொரோனா வைரஸ் அச்சம் பல நாடுகளில் இன்னும் நீடித்த வண்ணமே காணப்படுகின்றது.

இந்நிலையில் இந்நோய் தொற்றை கண்டுபிடிப்பதற்கு பல்வேறு வகையான அறிகுறிகள் தொடர்பில் ஏற்கணவே தகவல்கள் வெளியாகியிருந்தன.

சில சமங்களில் அறிகுறிகள் இன்றியும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது.

இப்படியிருக்கையில் தற்போது புதிய அறிகுறி தொடர்பில் ஆய்வு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் பாதத்தின் கீழ்ப் பகுதியில் சிரங்கு (Rashes) போன்ற அடையாளங்கள் தோன்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பகுதியில் உள்ள தோலில் குருதி உறைதல் ஏற்படுவதன் காரணமாகவே இந்த அறிகுறி தோன்றுவதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர் பகுதியில் உள்ள சில கொரோனா நோயாளிகளிலேயே இந்த அறிகுறி தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்