அடிக்கடி முதுகுவலி ஏற்படுகின்றதா? உஷாரா இருங்க...இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்குமாம்!

Report Print Kavitha in நோய்

இன்றைய இளம் தலைமுறையினர் பெரும்பாலானோரை முதுகு வலி பாடாய்படுத்திக்கொண்டிருக்கிறது.

பொதுவாக 80% மக்கள் அடிக்கடி முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆயினும் 25 வயது முதல் 55 வயது உடையோர் அடிக்கடி கூறுவர்.

இருப்பினும் முதுகில் வலி ஏற்படுவது, ஏதோ ஒரு நோயின் அறிகுறியாக இருக்கலாம் . இதனை தெரிந்து கொண்டால் கூட முதுகு வலியிலிருந்து விடுபட முடியும்.

அந்தவகையில் முதுகுவலி வர காரணம் என்ன? இது எதன் அறிகுறிகள் என்று தற்போது இங்கு பார்ப்போம்.

முதுகுவலி உணர்த்துவது என்ன?

 • மனிதனின் உடல் உள் உறுப்புக்கள் பழுதடைந்தால், ஒழுங்காக இயங்கவில்லை என்றால் அது முதுகெலும்பில் வலியாக உணர்த்துகின்றது.

 • அடிமுதுகு வலி ஏற்பட்டால் நமது உடலில் கோணாடு சுரப்பி ஒழுங்காக இயங்கவில்லை. அதனால் சிறுநீரகம் சம்பந்தமான வியாதி வருவதற்கு ஒரு அறிகுறிதான் அடிமுதுகு வலி.

 • நடுமுதுகு வலி ஏற்பட்டால் சிறுகுடல், பெருங்குடல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.

 • கழுத்து முதுகுவலி ஏற்பட்டால் இதயம், நுரையீரல் ஒழுங்காக இயங்கவில்லை என்று அர்த்தம்.

முதுகுவலி வரக் காரணங்கள் என்ன?

 • உடல் பயிற்சி செய்யாமல், நன்றாக அதிகம் சாப்பிட்டு தொப்பை போடுபவர்களுக்கு அடிமுதுகுவலி வரும்.

 • அதிக நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடி முதுகுவலி வரும்.

 • தொடர்ந்து அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு உடற் பயிற்சி செய்யாதிருந்தால் முதுகுவலி வரும்.

 • ஒரே இடத்தில் பல மணி நேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு முதுகுவலி ஏற்படும்.

 • அடிக்கடி சளி பிடித்தல், மூக்கடைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு கழுத்து, முதுகுவலி ஏற்படும்.

 • நுரையீரல் பழுதடைவதால், கழுத்து முதுகுவலி வருகின்றது.

 • அதிகம் கவலைப்படுபவர்களுக்கு இதயம் பாதிப்பால் கழுத்து முதுகுவலி ஏற்படும்.

 • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகி அதனால் அடிக்கடி காய்ச்சல் வருபவர்களுக்கு முதுகு முழுவதும் வலி இருக்கும்.

 • ஏதாவது ஒரு காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிமுதுகுவலி, கழுத்து முதுகு வலி ஏற்படும்.

 • எதிர்பாராத விபத்தினாலும், முதுகில் பலம் வாய்ந்த எடையுள்ள பொருட்கள் விழுந்தாலும் அடி முதுகில் வலி ஏற்படுகின்றது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்