உலக அளவில் கொரேனா வைரஸ் தாக்கமானது இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.
இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யாவும் 4வது நாடாகக் காணப்படுகின்றது.
இந்நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரசிற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சி இடம்பெற்றுவருகின்றது.
இதற்கிடையில் வினைத்திறன் வாய்ந்த தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா கடந்த வாரம் அறிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இவை அனைத்தும் வெற்றியளித்துள்ளன.
எனவே குறித்த தடுப்பு மருந்தினை அடுத்த மாதமளவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இந்தியாவிலும் தடுப்பு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.