நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: கிடுகிடுவென உயரும் கருங்கோழி இறைச்சி விலை

Report Print Kavitha in நோய்
238Shares

கொரோனாநோய்யை கட்டுப்படுத்த இன்று பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள ஆரம்பித்து வருகின்றனர்.

அதில் கருங்கோழி இறைச்சிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

ஏனெனில் இந்த கோழியின் இறைச்சியை உண்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று பலரும் கருதி வருவதால் நாளுக்கு நாள் இந்த இறைச்சிக்கான தேவை அதிகரித்து வருகிறது.

கோழி வளர்ப்பவர்கள் “இயற்கை உணவுகள் மற்றும் தானியங்கள் மட்டுமே இதற்கு கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதால் கருங்கோழி உட்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்” என்று கூறுகின்றனர்.

இதனால் ஜனவரி மாதம் ரூ. 450க்கு ஒரு கிலோ விற்பனை செய்யப்பட்ட கருங்கோழி கறி தற்போது ரூ. 1000க்கு ஒரு கிலோ கறி விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று ரூ. 15க்கு விற்கப்பட்ட ஒரு முட்டையின் விலை ரூ. 25 ஆக தற்போது உயர்ந்துள்ளது.

மேலும் கருங்கோழி சாப்பிடுவதனால் மட்டும் கொரோனா வைரஸ் கட்டுப்படாது , வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளி பின்பற்றுவதும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்