இரண்டு கை, இரண்டு கால்கள் இல்லாமல் பிறந்த பெண் குழந்தை! என்ன காரணம்? வெளியான புகைப்படம்

Report Print Santhan in நோய்

இந்தியாவில் ஒரு அரிய மரபணு கோளாறு காரணமாக கை மற்றும் கால்கள் இல்லாமல் பெண் குழந்தைகள் பிறந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் Vidisha மாவட்டத்தின் Sironj Tehsil-ல் இருக்கும் Sakla என்ற கிராமத்தை சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க தாய், அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார்.

ஆனால் குழந்தை பிறக்கும் போதே இரண்டு கைகள் மற்றும் கால்கள் இல்லாமல் அரிய வகை மரபு கோளாறு காரணமாக பிறந்துள்ளது.

பிறவு கோளாறுடன் பிறந்துள்ள இந்த குழந்தை Tetra-Amelia என்ற நோய் அறிகுறியுடன் பிறந்துள்ளது. இது கை மற்றும் கால்கள் இல்லாததை வகைப்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Sironj Tehsil-யில் இருக்கும் Rajiv Gandhi Smriti மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் ஒருவர், குழந்தை முற்றிலும் நலமாக உள்ளது.

இருப்பினும், குழந்தையின் உட்புற உறுப்புகள் சரியாக வளர்ந்திருக்கிறதா என்பதை அறிவதற்கு பல சோதனைகள் தேவை என்பதால், மருத்துவர்களிடம் அழைத்துச் செல்லும் படி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tetra-Amelia நோய் அறிகுறி என்பது WNT3 மரபணுவில் உள்ள பிறழ்வுகளால் ஏற்படும் ஒரு மரபணு கோளாறு. இது மிகவும் அரிதானது. 100,000 புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு இந்த நோய் பாதிக்கிறது.

தன்னுடைய வாழ்க்கையில், இது தான் முதல் வழக்கு என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்