கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது?

Report Print Kavitha in நோய்
#S

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்குப் எப்படி பரவுகின்றது? இதிலிருந்து நம்மை எப்படி காத்து கொள்ளலாம் என பற்றி இங்கு பார்ப்போம்.

  • இருமல் மற்றும் தும்மலின் வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவும்.
  • நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.
  • வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்.
  • கண், வாய், மூக்கு ஆகியவற்றை கைகளைக் கழுவுவதற்கு முன்பாகத் தொடுவதால் பரவும்.
  • அடிக்கடி கையை சோப்பு போட்டு 20 நொடிகளாவது நன்கு தேய்த்துக் கழுவுங்கள். கைகளைக் கழுவாமல் உங்களுடைய கண்கள், மூக்கு மற்றும் வாய்ப்பகுதியைத் தொடுவதைத் தவிர்த்திடுங்கள்.
  • உடல் நலம் குன்றியவர்களிடம் நெருக்கமாக இருப்பதைத் தவிர்த்துவிடுங்கள்.
  • ஒருவேளை தொற்று பரவி விட்டால் நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள்.
  • மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.
நோய்த் தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ள முடியும்?
  • வலி நிவாரணி மற்றும் காய்ச்சல் மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
  • குழந்தைகளாக இருந்தால் ஆஸ்பிரின் போன்ற மருந்துகளைத் தவிர்த்து விடுங்கள்.
  • நீராவி கொண்டு ஆவி பிடியுங்கள். இருக்கும் இடத்தை கதகதப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். சுடுதண்ணீரில் தினமும் இரண்டு முறையாவது குளிக்க வேண்டும்.
  • லேசாக முடியாதது போல உணர்ந்தீர்கள் என்றால், வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுங்கள். நிறைய நீர் ஆகாரங்களைச் சாப்பிடுங்கள்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்