புகைப்பழக்கமானது ஈரலை மாத்திரமன்றி இந்த அங்கத்தையும் பாதிக்கின்றதாம்

Report Print Givitharan Givitharan in நோய்

முன்னர் புகைப்பழக்கத்தால் நுரையீரல், ஈரல் என்பன வெகுவாக பாதிப்படைவதாக ஆய்வுகளின் மூலம் எச்சரிக்கப்பட்டிருந்தது.

எனினும் தற்போது இவ் அங்கங்களை தவிர கண்களையும் புகைத்தல் பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியத்தில் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் கண்பார்வையில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

இப் பாதிப்பு தொடர்பில் ஆராய்ந்தபோது புகைத்தல் கண்களில் குருட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியன என்பது தெளிவாகியுள்ளது.

இதனை Association of Optometrists (AOP) அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

சிகரட்டில் உள்ள நச்சு இரசாயனப் பதார்த்தங்களே கண்ணிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers