கருப்பை புற்றுநோய்: அறிகுறிகள் என்னென்னா...?

Report Print Abisha in நோய்

புற்றுநோய் என்றாலே உயிரணுகளில் ஏற்படும் ஒரு அசாதாரண வளர்ச்சி என்று கூறப்படுகின்றது. அந்த வகையில் யூட்ரஸ் கேன்சர் அல்லது கருப்பை புற்றுநோயும் உள்ளடங்கும்.

இதன் மூலம் உங்கள் உடலில் சில அறிகுறிகள் தெரிய வாய்ப்புள்ளது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றைப் பற்றி அறியலாம்.

இந்த நோய் எந்த வயதிலும் பெண்களுக்கு வர முடியும். ஆனால் பெரும்பாலும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களைக் கருப்பை புற்றுநோய் அதிக அளவில் தாக்குகிறது. வல்லுநர்கள் இந்த நோய்க்கான சரியான காரணங்களை இன்னும் கண்டறியவில்லை.

கருப்பை புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகள்.

அசாதாரண ரத்தப்போக்கு: கருப்பை புற்றுநோய் பாதித்த பெண்களுக்கு அசாதாரண ரத்தப்போக்கு இருக்கும். உங்களுக்கு மாதவிடாய் நின்றபிறகும் ரத்தப்போக்கு ஏற்பட்டால் உங்கள் மருத்துவருடன் ஆலோசித்து சரியான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும். இதில் குறிப்பாக இளஞ்சிவப்பு, வெள்ளை அல்லது சிவப்புநிற வெளியேற்றம் இந்த நோய்க்கான அறிகுறியாகும்.

சிறுநீர் கழிப்பதில் சிரமம்: சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது சிலநேரம் கருப்பை புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பதால் இது குறையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலுறவின்போது வலி: பொதுவாகச் சில பெண்கள் உடல் உறவு கொள்ளும்போது வலியை அனுபவிக்கின்றனர். கருப்பை புற்றுநோய் காரணமாகவும் அந்த வலி ஏற்படும். கருப்பையில் கட்டி ஏதாவது இருப்பதும் இந்த வலிக்குக் காரணமாக இருக்கலாம். எனவே இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்