6 மாதத்தில் 30 மில்லியன் பேர் கொல்லப்படுவார்கள்: பில்கேட்ஸ் தெரிவித்த அதிர்ச்சி தகவல்

Report Print Givitharan Givitharan in நோய்

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனரும், உலகின் இரண்டாவது பணக்காரருமான பில்கேட்ஸ் பொது தொண்டுகள் செய்வதில் ஆர்வம் மிக்கவர்.

குறிப்பாக சிறுவர்ளில் ஏற்படும் தொற்றுநோய்களை தடுப்பதற்காக பெரும்பங்கு ஆற்றிவருகின்றார்.

இவர் அண்மையில் வெளியிட்ட கருத்து ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அதாவது அடுத்து வரும் 10 வருடங்களுக்குள் உலகளவில் ஒரு கொடிய நோய் பரவும் என தெரிவித்துள்ளார்.

இதனால் 6 மாதங்களில் 30 மில்லியன் பேர்வரை கொல்லப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களை தாக்கக்கூடிய இந்த நோய் போலியோ மற்றும் மலேரியாவினைப் போன்று இருக்கும் என மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்