12 வகையான நோய்களை முழுமையாக குணப்படுத்தும் இயற்கை வைத்தியம்!

Report Print Jayapradha in நோய்

உடலில் ஏற்படும் பலவகையான பிரச்சனைகளை வீட்டில் இருந்தே முழுமையாக சரி செய்ய உதவும் சில இயற்கை வழிகளைப் பற்றி பார்ப்போம்.

தலைவலி

தலைவலி ஏற்படும் பொழுது கற்பூரவல்லி இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாக கலந்து நெற்றியில் பற்றுப் போட்டு வந்தால் குணமாகும்.

வாய் புண்

அடிக்கடி வாய்புண் வரும் பொழுது மோரில் உப்பு சேர்த்து 5 நிமிடம் வரை வாயில் வைத்திருந்து, பின்பு வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை ஒரு வாரம் வரை தொடர்ந்து செய்து வர வாய் புண் குணமாகும்.

சளி

சளிப்பிரச்சனை உள்ளவர்கள் தூதுவளைச் சாறு, துளசி இலைச் சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் சளிக் குறையும்.

தூக்கமின்மை

நல்லெண்ணெயில் பாகற்காய் சாறு கலந்து படுக்கும் முன் இந்த எண்ணெயை உச்சந்தலையில் ஊற்றி நன்றாக தேய்த்து விட்டு படுத்தால் தூக்கம் நன்றாக வரும்.

கழுத்துச் சுளுக்கு

எலுமிச்சைச்சாறு மற்றும் தேன் எடுத்து நன்றாக கலந்து சுளுக்கு இருக்கும் இடத்தில் சிறிது விட்டு நன்கு தடவி விட்டு வந்தால் சுளுக்கு குறையும்.

பல் வலி

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும்.

வறட்டு இருமல்

கிராம்பை இடித்து அந்த பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து காய்ச்சி சாப்பிட்டால் வறட்டு இருமல் குணமாகும்.

விக்கல்

விக்கல் வரும்போது 1 கிண்ணம் அளவு தயிரை எடுத்து 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து கலந்து மெதுவாக குடித்து வர விக்கல் குணமாகும்.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிகாய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும்.

மூலம்

திப்பிலி, சுக்கு, எள் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு அரைத்து பொடி செய்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் குறையும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers