உடலில் வலி இல்லாத கட்டிகள் இருக்கிறதா? அலட்சியம் வேண்டாம்

Report Print Jayapradha in நோய்

நம் உடலில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் நம்மில் பலரிடமும் உள்ளது.

உடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகள், சாதாரணக் கட்டிகள் என்று இருவகை உள்ளது.

ஆனால் சாதாரணக் கட்டிகளில் கொழுப்பு கட்டி, நார்க்கட்டி, நீர்க்கட்டி , திசுக்கட்டி எனப் பலவகை உள்ளது. இந்த சாதாரணக் கட்டிகள் எப்போதும் வலிக்காது.

கொழுப்புக் கட்டி ஏற்பட காரணம் என்ன?

கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான மற்றும் தெளிவான காரணம் இன்னும் உறுதிப்படவில்லை. ஆனால் இதற்கு பரம்பரைத் தன்மை, அதிகக் கொழுப்பு மிக்க உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவையே காரணமாகின்றன.

கொழுப்புக் கட்டியின் அறிகுறிகள் என்ன?

கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டு இருந்தால், அது கொழுப்பு கட்டி ஆகும். இந்த கொழுப்புக் கட்டி தோல் மற்றும் தசைகளுக்கு இடையில் வளரும்.

இந்த கட்டி மென்மையாக, உருண்டையாக, கையால் தொட்டால் நகரக் கூடியதாகவும் இருக்கும். இதை அதிகமாக அழுத்தினாலும் வலி ஏற்படாது.

கொழுப்புக் கட்டி நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும். அதிகபட்சம் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இந்த கொழுப்புக் கட்டிகள் வளரும்.

கொழுப்புக் கட்டிகள் புற்றுநோய் கட்டியாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் சாதாரணக் கட்டிகளின் வகையைச் சார்ந்தது. இவை புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் கட்டி வந்ததும் அது கொழுப்பு கட்டி தான் என்பதை உறுதி செய்துக் கொள்வது நல்லது.

புற்றுநோய் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருந்தாலும், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, கட்டியின் அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற சில அறிகுறிகளும் ஏற்படும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers