பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பரவும் கொடிய நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in நோய்

தட்டம்மை (Measles) எனப்படும் நோயானது பல வருடங்களுக்கு முன்னர் தடுப்பு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்துகளில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே இந்த நோய் மீண்டும் தலைதூக்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த நோயானது measles எனப்படும் வைரஸ் மூலமே கடத்தப்படுகின்றது.

குறித்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது 40 செல்சியஸ் டிகிரியில் காய்ச்சல் இருக்கும், இருமல் காணப்படும், தடிமன் மற்றும் கண்களில் அழற்சி காணப்படும்.

உலக சுகாதார நிறுவனம் கடந்த வருடம் மேற்கொண்ட ஆய்வில் உலகளாவிய ரீதியில் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே வினைத்திறனான தடுப்பு மருந்துகளை உருவாக்கி வழங்குவதன் மூலமே மீண்டும் இந் நோயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்