உங்கள் நாக்கில் கருப்பு புள்ளி உள்ளதா? இந்த நோயாக கூட இருக்கலாம்

Report Print Jayapradha in நோய்

மனிதன் பேசுவதற்கும் மென்ற உணவை விழுங்கி உணவுக் குழாய்க்குத் தள்ளுவதற்கும் வாயில் உள்ளே உள்ள நாக்கு தான் உதவுகிறது.

மேலும் உணவின் சுவையை உணரும் முதன்மையான உறுப்பு நாக்காகும். அதனால் நாக்கின் தன்மையை வைத்தே உடலில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

எனவே தினமும் காலையில் பற்களை துலக்கும் முன் நாக்கை கவனிக்க வேண்டும். அப்போது உள்ள நாக்கின் நிறமானது உங்கள் உடலில் உள்ள பாதிப்பு என்னவென்பதை உணர்த்துகிறது

நாக்கின் நிறம் உணர்த்தும் நோய்கள்?
 • கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் அது வாய்வு கோளாறு உள்ளது என்பதைக் குறிக்கிறது. மேலும் நாக்கின் மீது கறுப்பு நிற புள்ளிகள் இருந்தால் நம் உடலின் ரத்த ஓட்டத்தில் கோளாறு உள்ளது என்று அர்த்தம்.
 • நாக்கு வெள்ளை நிறத்தில் இருந்தால், வாயில் தொற்றுப்பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
 • சிவப்பு நிறத்தில் நாக்கு இருந்தால், விட்டமின் பாதிப்பு என்று அர்த்தம். மஞ்சள் நிறத்தில் நாகு இருந்தால் நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு உள்ளது என்று அர்த்தம்.
 • நாக்கின் நுனி மட்டும் சிவந்து இருந்தால் மனஅழுத்தம் என்றும், நாக்கின் பின்புறம் சிவப்பு நிறத்தில் இருந்தால் அது சுவாச கோளாறு என்று அர்த்தம்.
 • நாக்கு வீக்கம் அடைந்து இருந்தால் ஊட்டச்சத்துக் குறைபாடு என்று அர்த்தம்.
 • நாக்கில் வலி எடுத்தால், சர்க்கரை நோய் என்றும், நாக்கின் இடது மற்றும் வலது பக்கத்தில் வலி எடுத்தால் அது கல்லீரல் பாதிப்பு என்று அர்த்தம்.
 • நாக்கின் மேற்பரப்பு வறண்டு இருந்தால் ரத்தச்சோகை பிரச்சனையும், அதுவே அடர்சிவப்பு நிறம் என்றால் அது உடல் உஷ்ணம் என்றும் அர்த்தம்.
 • நாக்கில் வெடிப்புகள் இருந்தால், அது உடலின் தசை வாய்வின் சமநிலையில் உள்ள பாதிப்பைக் குறிக்கிறது.
 • நாக்கின் நுனியில் வெளிறிய கோடுகள் இருந்தால், அது உடலுக்கு தேவையான சத்துக்கள் இல்லை என்பதை குறிக்கிறது.
 • நாக்கின் நடுவில் கோடுகளை போல இருந்தால், அது எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்பதைக் குறிக்கிறது.
குறிப்பு
 • தினமும் பிரஷ் செய்யும் போது, நாக்கின் மேல்புறத்தை நன்கு சுத்தப்படுத்த வேண்டும். அதுபோல, சாப்பிட்டதும் மிதமான சூட்டில் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது மிகவும் அவசியம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers