அல்ஸைமர் நோயை குணப்படுத்த HIV மாத்திரைகள்

Report Print Givitharan Givitharan in நோய்

அல்ஸைமர் போன்ற மூளை நோய்களை குணப்படுத்துவதற்கு HIV இற்கு எதிராக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை பயன்படுத்த முடியும் என ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அல்ஸைமர் போன்ற நோயினால் மக்கள் மரணமடைவது 6 வது இடத்தில் காணப்படுகின்றது.

அத்துடன் அங்கு 5.7 மில்லியன் மக்கள் இவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது 2060 ஆம் ஆண்டளவில் இரண்டு மடங்காகும் அபாயம் இருப்பதாகவும் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு எச்சரிக்கை செய்துள்ளது.

இவ்வாறான நோய்களுக்கான நிவாரணிகளை கண்டறியும் நோக்கிலான ஆராய்ச்சிகளுக்கு 2015 ஆம் ஆண்டில் 226 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் மேற்கொண்டு வந்த ஆய்வு ஒன்றிலேயே HIV மாத்திரைகள் அல்ஸைமர் நோய்க்கு சிறந்த நிவாரணியாக விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers