சர்க்கரை நோய் யாருக்கு வரும்? அக்குள் பகுதியை வைத்தே கண்டுபிடிக்க முடியுமாம்!

Report Print Jayapradha in நோய்

குறைவான உடல் உழைப்பு, காய்கறிகள் அதிகம் சேர்த்து கொள்ளாமை, அதிக இனிப்பு துரித உணவுகளை சாப்பிடுவது, நேரம் தவறி சாப்பிடுவது இது போன்ற பல காரணத்தினால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

சர்க்கரை நோயை கண்டுபிடிப்பது எப்படி?

அக்குள் பகுதியில் கருப்பான மடிப்புகள் இருக்கும். இந்த கருப்பு மடிப்பு வெல்வெட் போல் மிருதுவாகவும் கெட்டியாகவும் இருந்தால் அது சர்க்கரை நோய் உள்ளது என்பதை குறிக்கிறது.

யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் வரும்?
  • ஜீன் குறைபாடு இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.
  • குழந்தை பிறக்கும் போது அந்த குழந்தை 4.5 கிலோவிற்கு அதிகமாக இருந்தால், அந்த தாயிக்கு பிற்காலத்தில் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று மருத்துவம் கூறுகின்றது.
  • தைராய்டு சுரப்பது குறைவாக இருந்தால், அவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உண்டு.
  • கர்ப்பப்பையில் நீர்க்கட்டி, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனில் சீரற்ற நிலை ஏற்பட்டால், சர்க்கரை நோய் வரும் வாய்ப்புகள் உள்ளது.
  • பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் வயதை நெருங்கும் போது சர்க்கரை வரும் வாய்ப்பு அவர்களுக்கு மிகமிக அதிகமாகிறது.
  • கலோரி குறைந்த உணவைக் கூட அளவுக்கு அதிகமாக உண்பவர்களுக்கும் நீரிழிவு நோய் அதிகம் வருகிறது.
  • மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் மிகக் குறைந்த வயதிலேயே வந்து விடுகிறது.
  • ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
  • புகையிலை, மது ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக உபயோகிப்பவர்களுக்கும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers