மூளைப் புற்றுநோய் ஏற்பட இதுதான் காரணமா? வெளிப்படுத்தும் முக்கிய அறிகுறிகள்

Report Print Jayapradha in நோய்

தற்போதைய காலத்தில் புற்றுநோயின் தாக்கத்திற்கு பல பேர் ஆளாகின்றனர். ஆனால் இப்படி புற்றுநோய் பலரையும் தாக்குவதற்கு முக்கிய காரணம் அன்றாடம் நாம் சாப்பிடக் கூடிய உணவுப் பொருட்களும் காரணமாம்.

மூளை புற்றுநோய்கான காரணம்
  • மூளைப் புற்றுநோயானது, நமது மூளையில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சி மற்றும் அதனுடைய பெருக்கம் காரணமாக ஏற்படுகிறது.
  • மூளைக் கழலையை ஏற்படுத்தும் செல் தொடர்பான கோளாறுகள் இரண்டு வகைப்படும். முதல் வகை மூளையில் வளரும். இரண்டாவது வகை உடலில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகள்.
  • ஒருவருக்கு மூளை புற்றுநோய் வருவதற்கு, அவர்களின் மோசமான டயட், காய்கறிகள், மீன் போன்றவற்றை குறைவாக சாப்பிடுவது, சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகம் சாப்பிடுவது இது போன்ற காரணங்கள் உள்ளது.
  • இந்த மூளைப் புற்றுநோயினால், இறப்பு விகிதமும் மிக அதிகம் எனவே இதற்கான அறிகுறிகளை தெரிந்துக் கொண்டு அதற்கான சிகிச்சையை ஆரம்பத்திலேயே செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
மூளைப் புற்றுநோயின் அறிகுறிகள்
திடீரென மயக்கம்
  • நம்மை அறியாமல் கீழே விழுவது, சாதாரண வேலையை செய்வதில் கஷ்டப்படுவது, பொருட்களை தவறவிடுவது, இது போன்ற தடுமாற்றங்கள் மற்றும் நரம்புகள் பலவீனம் அடைதல் இந்த அறிகுறிகள் இருந்தால், அது மூளைக் கழலை நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
கைகள் மற்றும் கால்கள் மறுத்துபோதல்
  • மூளைக் கழலை நோய் அதிகரிக்கும் போது, நமது கைகள் மற்றும் கால்களில் உணர்ச்சி அற்று இருக்கும். மேலும் நமது உடல் முழுவதும் ஒருவித கூச்ச உணர்வுகள் மற்றும் ரத்தழுத்தம் குறைந்து காணப்படும்.
பேச சீரமப்படுதல்
  • சில நேரங்களில் குறிப்பிட்ட நிகழ்வுகள் அல்லது வார்த்தைகள், முதலியவற்றை மறந்து விடும் நிலைகள் ஏற்பட்டு பல குழப்பங்கள் மனதில் தோன்றினால் அதுவும் மூளைக் கழலை நோயிக்கான அறிகுறிகளாகும்.
அடிக்கடி குமட்டல்
  • வெளிப்படைக் காரணம் எதுவும் இல்லாமல் குமட்டல் அடிக்கடி ஏற்பட்டால், அது மூளைக் கழலை நோயின் மிக நுட்பமான அறிகுறிகளில் ஒன்றாகும்.
மங்கலான பார்வை
  • நமது கண்களை சோதனை செய்யும் பொழுது அதில் எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் மங்கலான பார்வை தெரிந்தால், அது மூளைக் கழலை நோயின் அறிகுறியாகும்.
தங்க முடியாத வலி
  • நமது முகத்தின் பல்வேறு பகுதிகளில் கூர்மையான வலிகள் ஏற்பட்டால், அது நிச்சயமாக மூளைக் கழலை நோயின் மற்றொரு முக்கிய அறிகுறியாகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers