மூளை பக்கவாதம்: அவசியம் கவனிக்க வேண்டிய 8 முக்கிய அறிகுறிகள்

Report Print Jayapradha in நோய்

இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதான இஸ்கீமியா என்றழைக்கப்படும் நிலையினாலோ அல்லது இரத்த ஒழுக்கினாலோ மூளை பக்கவாதம் ஏற்படக்கூடும்

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக கொழுப்புச்சத்து மற்றும் இதய நோய்கள் போன்றவை மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான மிக முக்கிய அபாயகரமான காரணிகளாக விளங்குகின்றன

முகச் சாய்வு

இந்நோயின் முதல் அறிகுறி நோயாளியின் முகம் ஒரு பக்கமாக சாய்ந்தோ அல்லது முகத்தின் ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனது போன்று உணர்வு உண்டாகும்.

மேலும் அவரால் சரியாக புன்னகைக்க இயலவில்லையெனில், தாமதிக்காது மருத்துவமனைக்கு விரைவாக அழைத்துச் செல்ல வேண்டும்.

தலைவலி

பெரும்பாலும் சிலருக்கு திடீரென தாங்க முடியாத தலைவலி ஏற்படும் இதற்கு காரணம் இரத்த ஒழுங்கினால் உண்டாகக்கூடிய பக்கவாதத்தின் அறிகுறியாகவே இருக்கும்.

நினைவிழப்பு

இவ்வைகை நோயாளிகளால் சற்று முன் நிகழ்ந்த எந்த ஒரு நிகழ்வையும் அவர்களால் நினைவில் நிறுத்திக் கொள்ள இயலாது.

பார்வைக் கோளாறு

திடீரென பார்வை இருளடைதல் அல்லது பார்வைக் கோளாறுகள் போன்றவையும் மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் தான்.

கைகள் மரத்துபோதல்

பக்கவாத நோயாளி தன் ஒரு கையோ அல்லது இரு கைகளுமோ மரத்துப் போய் விட்டது போன்றோ அல்லது வலுவிழந்தது போன்றோ உணர்வார்.

பேசுவதற்கு சிரமப்படுதல்

பக்கவாதத்தினால் பாதிக்கப்படும் போது நோயாளிகளின் பேச்சு குழறுவதைக் காணலாம். பொதுவாக அவர்களால் சரியாக பதிலளிக்க முடியாது.

உடல் அசைவில் மாற்றம்

பக்கவாத நோயாளிகள் அவர்களது உடலின் சமன்பாட்டை இழந்து, சிறு அசைவுக்கும் சிரமப்படுவதோடு, ஒருங்கிசைவு இன்றியும் அவதிப்படுவர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்