குடலிறக்க பிரச்சனையை சரிசெய்யும் சில இயற்கை வைத்தியங்கள்

Report Print Jayapradha in நோய்

குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பில் உள்ள துவாரத்தின் வழியே அதன் தசைச்சுவரில் ஏற்படும் புடைப்பாகும்.

குடலிறக்கம் வந்தால் உடல் எடை அதிகரிப்பது, கல்லீரல் நோய், தொடர்ச்சியான இருமல், மலச்சிக்கல், வயிற்றில் புடைத்த நிலையில் கட்டி உண்டாவதோடு, கடுமையான வலி போன்றவை ஏற்படும்.

குடலிறக்கத்தை சரிசெய்யும் சில இயற்கை முறைகளைப் எப்படி பின்பற்றி அதனை குணப்படுத்தலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

குடலிறக்கத்திற்கு காரணம்
 • ஒருவர் கனமான பொருளை தூக்கும் பொழுது வயிற்றின் தசைகள் இருகும், இதனால் குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புண்டு.
 • முதுமையில் தசைகள் பலவீனமடைந்து விடும். தோல் சரியும் பொழுது உடலில் உள்ள உறுப்புகள் தொங்கி போவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 • வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு எந்நேரமும் குடலிறக்கம் ஏற்படலாம்.
 • மலசிக்கலினால் பிரத்தனை உள்ளவர்காள் சீறுநிர் கழிக்கும் போது சிரமப்படுவதால் வயிற்றின் மெல்லிய தசைகள் கிழிய வாய்ப்புண்டு. இது நேர்ந்தால் குடலிறக்கமும் ஏற்படும்.
 • அதிக கொழுப்பு படிதலால் வயிற்றின் தசைகள் விரிவடையும், இதனால் அவை பலவீனமாகும். பலவீனமடைந்த தசைகள் தான் குடலிறக்கத்திற்கு முதல் காரணம்.
குடலிறக்கத்தின் அறிகுறிகள்
 • வயிறு அல்லது குடல் பகுதியில் சிறிது விக்கம் ஏற்பட்டு வீங்கிய நிலை உண்டாகும்.
 • தோலின் அடியில் உள்ள கட்டியில் சிரமம் அல்லது வலி ஏற்படுதல்.
 • நெடுநேரம் நிற்கும் பொழுதோ அல்லது சிறுநீர் கழிக்கும் பொழுதோ அசௌகரியம் ஏற்படுதல்.
குடலிறக்கத்தை குணப்படுத்தும் முறை
 • தினமும் காலையில் வெறும் வயிற்றில் பாலில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
 • வாரத்திற்கு ஒரு முறை ஒரு ஸ்பூன் அதிமதுர பொடியை 1/2 கப் பாலில் கலந்து குடிக்க வாந்தால் பாதிப்படைந்த பகுதியில் உள்ள புடைப்பை நீக்கிவிடும்.
 • ஹெர்னியாவை குணப்படுத்துவதில் க்ரீன் டீ தான் சிறந்தது. ஆகவே தினமும் இரண்டு முறை க்ரீன் டீயை குடிக்க வேண்டும்.
 • தினமும் ஒரு கப் இஞ்சி டீயை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இருப்பினும் இதனை அளவாக குடிப்பது நல்லது. ஏனெனில் அது சில சமயங்களில் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.
 • வெதுவெதுப்பான சீமைச்சாமந்தி டீயை அவ்வப்போது குடித்து வந்தால், குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 • ஒரு நாளைக்கு மூன்று முறை மோரைக் குடித்து வந்தால், நிச்சயம் குடலியக்கத்தால் ஏற்படும் வலியை தடுக்கலாம்.
 • உணவில் கோதுமை பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் குடலியக்கம் சீராக செயல்பட்டு, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 • ஹெர்னியா பிரச்சனை இருப்பவர்கள், அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருக வேண்டும். இதனால் குடலிறக்கத்தால் ஏற்படும் வலி குறைந்துவிடும்.
 • அவகேடோ மற்றும் அன்னாசி போன்ற பழங்களை உண்டு வருவது மிகவும் நல்லது. மேலும் பச்சை காய்கறிகளான ப்ராக்கோலி, முட்டைகோஸ் மற்றும் பாகற்காய் போன்றவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers