வளி மாசுக்கள் நாட்கள் செல்ல செல்ல மனிதர்களின் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நோய்

மாசுக்கள் அதிகமாக இருக்கும் சூழலில் பொதுவாக சுவாசிப்பதென்பது மிகவும் கடினம்.

வாகனங்கள் வெளியேற்றும் புகை மற்றும் சிறிய துணிக்கைகள் காரணமாக வீதிகள் மாசுபடுத்தப்படுகின்றன.

மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்த வெளியேறும் புகையினால் வானம் மறைக்கப்படுகிறது.

இவையனைத்தம் வளி மாசுக்களால் ஏற்படுகின்றன.

இப் புகை, புகைக் கரி மற்றும் ஓசோன் போன்ற வளி மாசாக்கிகள் நமது நுரையீரல்களை அடைப்பதுடன் மூளையினையும் பாதிக்கின்றது.

எனவே இம் மாசுக்களுக்கு நீண்டகாலம் வெளிக்காட்டப்படும் போது அது அறிவாற்றலில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இது மனிதர்களில் பைத்தியமாதல் போன்ற நோய் நிலைமைகளுக்கும் காரணமாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers