உலகளவில் கொடிய நோயைப் பரப்பும் மூட்டைப் பூச்சிகள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in நோய்

Triatomine எனப்படும் குருதியுறிஞ்சும் மூட்டைப் பூச்சியானது Chagas எனப்படும் ஒட்டுண்ணி நோயைப் பரப்புகின்றது.

சிகிச்சையளிக்கப்படாதவிடத்து Chagas ஆனது கிட்டத்தட்ட 30 வீதமான நோயாளர்களில் இருதய மற்றும் குடல் கோளாறுகளுக்கு காரணமாகின்றது என CDC இன் கருத்துக் கணிப்பில் தெரியவருகிறது.

இக் கோளாறுகள் இருதய செயலிழப்பு மற்றும் திடீர் இறப்புக்களுக்கும் காரணமாகலாம்.

காரணம் பெரும்பாலான மக்கள் இந் நோய்க்கான அறிகுறிகளைக் காட்டுவதில்லை. மருத்துவ ஆய்வுகள் இந்நோயை "Silent Killer" என வர்ணிக்கின்றன.

இந்நோய் பொதுவாக மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் காணப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இது கனடா, ஜரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் யப்பான் போன்ற நாடுகளிலும் காணப்படுவதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவிற்கு வெளியேயுள்ள வைத்தியர்கள் இந்நோய் தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதனால் அதனை இனங்கண்டு, சிகிச்சையளித்து, கட்டுப்படுத்த முடியும்.

அமெரிக்க அறிக்கை ஒன்று தற்போது கிட்டத்தட்ட 300 000 மக்கள் அமெரிக்காவில் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது.

இரவு வேளைகளில் மக்கள், நாய்கள் மற்றும் பாலூட்டிகளை நோக்கிப் பயணிக்கும் triatomine பொதுவாக அவற்றின் முகங்களிலேயே கடிகளை ஏற்படுத்துகின்றது, குறிப்பாக வாய்கள் மற்றும் கண்களை அண்டிய பகுதிகளில். இதனால் இவை "kissing bugs" என அழைக்கப்படுகின்றன.

100 க்கும் மேற்பட்ட triatomine இனங்களில் கிட்டத்தட்ட 12 இனங்களே Chagas இற்குக் காரணமான Trypanosoma cruzi ஒட்டுண்ணியைக் காவுகின்றது. இம் மூட்டைப் பூச்சிகள் உண்ணும் வேளையில் மலத்தை வெளியேற்றுகின்றது. இதில் உயரளவில் ஒட்டுண்ணிகள் காணப்படுகின்றன. இத் மலத் திணிவு கடி ஏற்பட்ட இடத்தில் தேய்க்கப்படும் போது தொற்றுக்கு ஆளாக நேரிடுகின்றது.

பெரும்பாலான மக்கள் இதற்கான அறிகுறிகளைக் காட்டுவதில்லை. ஆயினும் சில மக்களில் இத் தொற்று முதலில் ஏற்படும் போது கண்மடல் வீங்கிக் காணப்படுகிறது.

நோய்நிலைமையின் ஆரம்பக் கட்டத்தில் சிலர் காய்ச்சல், களைப்பு, உடல் வலிகள், தலைவலிகள் மற்றும் அரிப்புக்கள் போன்ற அறிகுறிகளைக் காட்டுகின்றனர்.

சில நேரங்களில் மக்கள் வாந்திபேதி மற்றும் வாந்திகளால் பாதிக்கப்படுகின்றனர், சிறு வீதமான இளம் சிறுவர்கள் இதய வீக்கம் மற்றும் மூளை வீக்கங்களால் பாதிக்கப்படுகின்றனர். இது இறப்புக்களை ஏற்படுத்தக்கூடியது.

இந் நோயானது குருதிச் சோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறது, ஒட்டுண்ணி எதிர்ப்புச் சிகிச்சைகள் மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது.

தற்போது இந் நோயானது உலகின் மற்றயை பகுதிகளுக்கு இடம்பெயரும் மக்கள் மூலமாக கடத்தப்பட்டுவருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இது குருதி ஏற்றல், அங்க வழங்கல் மற்றும் கர்ப்பிணித் தாய்களிலிருந்து பிள்ளைகளுக்கு போன்ற பல வழிகளிலும் பரவக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்