சர்க்கரை நோயாளிகள் கனவில் கூட இந்த உணவை உண்ணாதீர்கள்!

Report Print Jayapradha in நோய்

நீரிழிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்குவது இல்லை.இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரையானத இருக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றையும் பாதிக்கும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன.

சாப்பிடக்கூடாத உணவுகள்

 • வாழைப்பழம் மற்றும் தர்பூசணி ஆகியவை சத்தானவை தான் என்றாலும், இதனை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக்கொள்வதால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.

 • பிட்சா போன்ற மிகவும் சுவையான உணவுகளில் அதிக கலோரிகள் உள்ளதால் எனவே நீங்கள் சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும்.

 • சர்க்கரை நோயாளிகள் முதலில் கார்போஹைட்ரைட் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம். மாவினால் செய்யப்பட்ட உணவு பொருட்கள், பிரட், பாஸ்தா போன்ற உணவு வகைகளை தவிர்த்துப்பது நல்லது.

 • பொரித்த உணவுகளை சாப்பிடுவது டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நிச்சயமாக சிறந்தது அல்ல. உருளைக்கிழங்கு சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், பொரித்த கோழிக்கறி, ஆகியவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டியது அவசியம்.

 • பொதுவாகவே குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்கக்கூடியது.

 • கொழுப்புள்ள பால் பொருட்கள், வெண்ணெய், ஐஸ் க்ரீம், முழுமையான கொழுப்பு கொண்ட யோகார்ட், கொழுப்பு கொண்ட தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

 • மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் உங்களது உடலின் கொழுப்பு அளவை அதிகரிக்கின்றன. இவை சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் இதய பாதிப்புகள் வரவும் காரணமாக இருக்கின்றன.

 • ஜூஸ் பருகுவதற்கு முன்னால் அதில் அடங்கியுள்ள சோடா, சர்க்கரை ஆகியவற்றின் அளவுகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

சாப்பிடக்கூடியவை

 • மேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம்.

 • பீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.

 • தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தயிரை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இன்சுலின் அளவும் சரியாக சுரக்கும்.

 • பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சத்துக்களே ஆகும்.

 • பழங்களில் பெர்ரிப் பழங்களில் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இவை நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த அளவு இனிப்பு வகைகளை செய்து கொடுப்பதற்கு சிறந்ததாக இருக்கும்.

 • பாகற்காய் நன்மைகள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers