குடல் வீக்கத்தை தடுக்க பயன்டுத்தப்படும் போதைப் பொருள்

Report Print Givitharan Givitharan in நோய்

அண்மையில் எலிகளில் மேற்கொண்ட ஆய்வொன்று கஞ்சாவினை செயலாக்கம் செய்யும் endocannabinoids என்படும் மூலக்கூறு குடல் வீக்கங்களை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது.

இவ் ஆய்வு மனிதர்களில் தொடரப்பட்டிராவிடினும், கஞ்சா பாவனையாளர்களில் இந் நோய்க்குரிய அறிகுறிகள் தென்படாதது நமக்கு சில குறிப்புக்களை தரத் தான் செய்கிறது.

பொதுவாக குடல் வீக்கங்கள் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கின்றது. இதன்போது நிணநீர்த் தொகுதியானது தவறாக குடல் படைகளைத் தாக்குகின்றது.

இதற்கென சிலர் தாமாகவே marijuanaவைக் கொண்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இம் marijuana வீக்கங்களுக்கெதிரான பண்புகளைக் கொண்டுள்ளது.

தற்போது எவ்வாறு endocannabinoids மற்றும் cannabinoids மூலக்கூறுகள் வீக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றது தொடர்பான விளக்கங்கள் பெறப்பட்டுள்ளன.

இவ் ஆய்வு எலிகளில் குடல் வீக்கம் இரு செயற்பாடுகளால் கட்டுப்படுத்த்படுவதை தெளிவுபடுத்தியுள்ளது.

முதல் செயற்பாடு பக்ரிரிய செயற்பாடு அதிகரிக்கையில் நிணநீர்த் தொகுதி தொழிற்பட்டு அதை வீக்கமடையச் செய்கிறது.

இரண்டாவது செயற்பாடு முதல் செயற்பாட்டை சமன் செய்து அகற்றுகின்றது. இதன் போது நிணநீர்த் தொகுதியின் செயற்பாடு நிறுத்தப்படுகிறது. இங்கு குடல் படைகளினூடு கடத்தப்படும் endocannabinoids குடலிலிருந்து நச்சுக்களை அகற்றிவிடுகிறது.

Endocannabinoids ஆனது cannabinoid இனை ஒத்தது. எனவே Endocannabinoids இற்குப் பதிலாக cannabinoid இனைப் பயன்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...