கருப்பைவாய் புற்றுநோய்.. பெண்களை உஷார்!

Report Print Jayapradha in நோய்

பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் முதலிடத்தைப் பெற்று இருப்பது கருப்பைவாய்ப் புற்றுநோய். இது பெண்கள் கருப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்புறுப்பு இணைகிற இடத்தில் செர்விக்ஸ் என்னும் கருப்பைவாய் உள்ளது.

கருப்பைவாய் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் என்கிற கிருமி கருப்பைவாய் இடத்தைத் தாக்கும்போது கருப்பைவாய் புற்றுநோய் வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் மிக இளம் வயதில் பாலுறவில் ஈடுபடும் பெண்கள், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் பெண்கள், கொனேரியா, எய்ட்ஸ் போன்ற பால்வினை நோய்கள் உள்ள பெண்கள் இந்நோய் அதிகம் பாதிக்கும்.

கருப்பை வாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்
  • சிறுநீர் கழிக்கும் பொழுது அதிகப்படியான எரிச்சல் உண்டாதல் மற்றும் சிறுநீர் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல்.
  • உடல் மிகுந்த சோர்வு உண்டாவதும் இதன் அறிகுறியே. இதற்கு காரணம் உடம்பில் இருந்து அசாதாரணமாக ரத்தம் வெளியேறும் பொழுது ரத்த அணுக்கள் குறைந்து உடலுக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவை குறைக்கின்றன. இதனால் பல நாட்களுக்கு உடலானது சோர்வாகவும் மந்தமாகவும் காணப்படுகின்றன.
  • யோனியில் தண்ணீர் மாதிரி, பழுப்பு நிறத்தில், ரத்தத்துடன், துர்நாற்றத்துடன் சீழ் வடிந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணமான திசுக்களின் தோற்றுகள் ஆகும்.
  • கருப்பை வாய் புற்றுநோய் வந்தவர்களுக்கு எப்பொழுதும் குமட்டல் உணர்வு ஏற்பட்டு சரியான உணவை உட்கொள்ள முடியமால் அவர்களின் உடல் எடை திடீர் என மிகவும் குறைந்து காணப்படுவர்.
  • மாதவிலக்கு முடிந்த பிறகு அதிக உதிரப்போக்கு இருந்தாலோ அல்லது கருப்பை வாயில் அரித்தாலோ அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம்.
  • மாதவிடாய் காலத்தில் வழக்கத்தை விட அதிகமாக இடுப்பில் வலி இருந்தால் அதுவும் கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியே ஆகும்.
  • எப்பொழுதும் வாந்தி வருவது மாதிரியான எண்ணம் தோன்றுதலும் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணம் ஆகும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்