சிறுநீரக பாதை தொற்றை தடுக்கும் உணவுகள்

Report Print Fathima Fathima in நோய்

மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரில் உப்புகள், கழிவுப் பொருட்கள் இருக்கும்.

ஆனால் அதில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய் தொற்று இருப்பதையே சிறுநீர் பாதை தொற்று நோய் என்கிறோம்.

அநேக நேரங்களில் உணவு குழாயில் ஏற்படும் கிருமி சிறுநீர் பாதை துவாரத்தின் வழியே உள் செல்வதால் சிறுநீர் பாதை தொற்று பாதிப்பு ஏற்படுகின்றது.

தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் கிருமிகள் சிறுநீரகம் வரை பரவும் ஆபத்து உள்ளது.

எனவே இத்தகைய தொற்றை தடுக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கிழங்கு வகையில் சத்துக்கள் நிறைந்தது சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சிறுநீர் பாதை தொற்றை எதிர்த்து போராடும் ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் இதில் நிறைந்துள்ளன.

இதேபோன்று கேரட்டில் உள்ள ஊட்டச்சத்துகளும் சிறுநீர் பாதை தொற்றை தடுக்கின்றன.

தயிர் நிறைய ப்ரோ-பையோடிக்ஸ் கொண்ட உணவுப் பொருளாகும். இது, பாக்டீரியாக்கள் மற்றும் நச்சு கிருமிகளை எதிர்க்கும் தன்மைக் கொண்டது.

முளைக்கட்டிய பயறு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தை சுத்தமாக வைத்து, சிறுநீரக கற்கள் வராமலும் தடுக்கும்.

ஆப்பிள் சாப்பிட்டால், ரத்த ஓட்டம் சீராகும். சிறுநீரகமும் சுத்தமாக இருக்கும். எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வருவது நல்லது.

உணவை தவிர, தண்ணீரும் சிறுநீர் பாதை தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. மற்றும் சிறுநீர் பாதையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க தண்ணீர் அதிகம் பருக வேண்டும்.

இதுதவிர முள்ளங்கியும், இலவங்கப் பட்டையும், பக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதால் சிறுநீரக நோய் தொற்றை தடுக்கிறது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers