இரவு தாமதமாக சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கு ஓர் எச்சரிக்கை!

Report Print Kabilan in நோய்
432Shares
432Shares
ibctamil.com

இரவு உணவை தாமதமாக எடுத்துக் கொள்ளும்போது, அது பல்வேறு நோய்களை அனுமதிப்பதற்கான காரணியாக அமைந்து விடுகிறது.

நாம் அனைவருக்கும் இரவு நேர உணவுப் பழக்கம் என்பது ஒரு தலைவலியாகவே உள்ளது. இரவு உணவை தாமதமாக உட்கொண்டால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் உண்டாகும்.

இரவு உணவு நோய்க்குறியால் பாதிக்கப்பட்ட நபர்கள், இரவு நேரம் முழுவதும் அதிக கார்போஹைட்ரேட், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வார்கள். மேலும், இவர்கள் இரவு உணவை உண்ட பின்னரும், மேலும் அதிகமாக உணவை உண்கிறார்கள்.

இதன் காரணமாக, இவர்களால் பகல் வேளைகளில் உணவை மிகக் குறைவாகவும், இரவு வேளையில் மிக அதிகமாகவும் தான் உட்கொள்ள முடியும்.

பாதிப்புகள்

  • இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களால் நிம்மதியாக தூங்க முடியாது. ஏனெனில், தூக்கத்தில் உணவை பற்றிய சிந்தனை அவர்களை ஆட்கொள்ளும்.
  • இவர்கள் வெறுப்புடனும், குற்ற உணர்ச்சியுடனுமே காணப்படுவார்கள். அதற்கு காரணம், அவர்கள் உணவு உட்கொள்ளும் போதே அடுத்த வேளை உணவைப் பற்றி சிந்திப்பது தொடங்கி, அதைப் பற்றி பயப்படுவது தான்.
  • இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பிற உணவு சம்பந்தப்பட்ட நோய்கள், தூக்க கோளாறுகள் மற்றும் மனநிலை கோளாறுகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம்.

தீர்வு

  • இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள், இரவு படுக்கைக்கு செல்லும் முன்னர் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியானது பசியை ஒடுக்கி, உங்களுக்கு ஒரு நல்ல தூக்கத்தை கொடுக்கும்.
  • இரவு நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் கொண்டவர்கள், உங்களுடைய இரவு உணவை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மாற்றி அமைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • இரவு உணவை 8 மணிக்கு முன்னதாகவே உட்கொள்ள வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்