நமது தோலில் மஸேசியா என்ற ஈஸ்ட் உருவாகிறது சில சமயங்களில் ஈஸ்டின் அதிகப்படியான வளர்ச்சியால் தோலில் சிவப்பு-பழுப்பு நிற புள்ளிகள் உருவாகும்.
இதைத்தான் நாம் தேமல் அல்லது தமல் என்று சொல்கின்றோம்.
இது தோல் நிறத்தை பாதிக்கும் மற்றொரு பொதுவான தோல்நோய் ஆகும்.
இது மேல் கைகள் , கழுத்து, வயிறு மற்றும் தொடைகள் பகுதிகளில் ஈஸ்ட் அதிகரிக்கும் போது தோன்றுகிறது.
ஈரமான, சூடான மற்றும் எண்ணெய் தோல் உடையவர்களுக்கு இந்தப்பாதிப்பு அதிகம் இருக்க வாய்ப்பு உண்டு.
சூடான மற்றும் ஈரப்பதமான காலநிலை, அதிகமான வியர்த்தல், எண்ணெய் தோல், ஊட்டச்சத்தின்மை, கர்ப்பகாலம் , கார்டிகோஸ்டீராய்டுகள், அல்லது நோய் எதிர்ப்பு திறன் குறைபாடு போன்ற காரணத்தினால் சருமத்தில் தேமல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
சிகிச்சை
படுக்கைக்கு செல்லும்முன்பு செலினியம் சல்ஃபைடு கொண்ட ஷாம்புவை பாதிக்கப்பட்ட இடங்களிலில் பயன்படுத்தலாம் ,காலையில் இதை கழுவிவிடவேண்டும்.
மேற்கொண்ட சிகிச்சைகளை குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு தொடரவேண்டும் , இரண்டு வரத்திற்குக்கு பிறகு தேமல் குறையவில்லை என்றால் நீங்கள் உடனடியாக ஒரு நல்ல தோல் மருத்துவரிடம் ஆலோசனைக்கு செல்வது நல்லது.