அதிகம் நேரம் டிவி பார்க்கும் ஆண்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து அதிகம்: ஆய்வு முடிவு

Report Print Athavan in நோய்

சமீபத்தில் பிரான்ஸில் உள்ள சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில், ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என தெரியவந்துள்ளது.

மாறிவரும் உணவுப் பழக்கங்கள், வாழ்வியல் முறை ஆகிய காரணங்களால் நம்மிடையே பரவலாகக் காணப்படும் நோயாக புற்றுநோய் உருவாகியுள்ளது.

தினசரி உடற்பயிற்சி , ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஆகியவற்றைக் கடைபிடித்து புற்றுநோயிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ள வேண்டிய நிலைமையில்தான் நாம் உள்ளோம்.

ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என்ற அதிர்ச்சி தகவல் பிரான்ஸில் உள்ள சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது.

5 லட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த் ஆரய்ச்சி நடத்தப்பட்டது . இறுதியாக 6 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில், சுமார் 2,391 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டதாக அந்த ஆய்வு கூறுகிறது

அவர்களில் ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி அதிகமாக பார்க்கும் ஆண்களே அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி முன்பு அதிக நேரம் செலவழிக்காத ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு எனவும் இதில் தெரியவந்துள்ளது.

அதேசமயம், தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஆண்களுக்கும் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers