பெருங்குடல் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரும்? இவர்கள் மட்டும் ஜாக்கிரதை

Report Print Printha in நோய்
1182Shares
1182Shares
lankasrimarket.com

ஆண்களை தாக்கும் கேன்சர்களின் எண்ணிக்கையில் 3-வது இடத்திலும், பெண்களை தாக்கும் கேன்சர்களில் 2-வது இடத்திலும் இருக்குமளவுக்கு பெருங்குடல் புற்றுநோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.

இந்த பெருங்குடல் புற்றுநோய் வந்தால் குடலின் உட்புறத்தில் தோன்றி, பெருங்குடல் முழுவதுமாக பரவி, மலக்குடல் வரை அதன் தாக்கத்தை உண்டாக்கும்.

அனைத்து நோய்களையும் போலவே இந்த பெருங்குடல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால், குணப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மிகவும் அதிகமாக உள்ளது.

ஆனால் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் அவ்வளவு எளிதில் தென்படுவதில்லை.

அறிகுறிகள்
  • குடல் இயக்கத்தில் மாற்றம் உண்டாகும்.
  • தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு ஏற்படும்.
  • மலத்தில் ரத்தம் படியும்.
  • மலச்சிக்கல் பிரச்சனை இருக்கும்.
  • உடல் எடை குறைவது போன்று இருக்கும்.

இது போன்ற பல அறிகுறிகள் இந்த பெருங்குடல் புற்றுநோய்க்கு ஏற்படும். எனவே கவனமாக இருப்பது நல்லது.

யாருக்கெல்லாம் பெருங்குடல் புற்றுநோய் வரும்?
  • நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • பெருங்குடல் புற்றுநோய்க்கு வயதும் மிக முக்கியக் காரணியாக செயல்படுகிறது. அதனால் 90% பேருக்கு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் பாதிப்பு ஏற்படும்.
  • புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு 14 சதவிகிதம், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதமும் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து உள்ளது.
  • மதுவை அதிகம் குடிப்பவர்கள், உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பவர்கள் ஆகியோருக்கு பெருங்குடல் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
குறிப்பு

சீரான இடைவெளிகளில் பெருங்குடல் புற்றுநோய் பரிசோதனைகள் செய்துக் கொள்வதன் மூலம், புற்றுநோய் செல்களாக மாறும் முன்னரே அவற்றை கண்டுபிடித்து அகற்றி விடலாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்