உயிரை பறிக்கும் காசநோய்: அறிகுறிகள் இப்படி தான் இருக்குமாம்

Report Print Printha in நோய்

காசநோயானது மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குளோசிஸ் (Mycobacterium tuberculosis) எனும் நுண்கிருமியால் வரக்கூடியது. இந்த நோய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாதிக்கக்கூடியது.

இதைப் பொதுவாக டி.பி (Tuberculosis)TB என்று கூறப்படுகிறது. இந்த நோயானது தலைமுடி, நகம், பல் தவிர உடம்பின் அனைத்து பாகங்களையும் தாக்கக்கூடியது.

சர்க்கரைநோய் மற்றும் ஹெச்.ஐ.வி உள்ளவர்களுக்கு காசநோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

இந்த நோயைச் சரியான சிகிச்சைகள் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும். காசநோயில் நுரையீரல் காசநோய் மற்றும் நுரையீரல் அல்லாத பகுதிகளில் பாதிக்கும் காசநோய் என இருவகைகள் உள்ளது.

காசநோயின் அறிகுறிகள்
 • இரண்டு வாரங்களுக்கு மேல் சளியுடன் கூடிய இருமல் இருக்கும்.
 • மாலை நேரத்தில் காய்ச்சல் ஏற்படும்.
 • பசியின்மை உண்டாகும்.
 • உடல் எடை குறையும்.
 • ரத்தம் கலந்த சளி வெளிப்படும்.
 • மார்பில் வலி ஏற்படும்.
கண்டுபிடிக்கும் சிகிச்சைகள்
 • CBNAAT என்ற முறையில் 2 மணி நேரத்தில் கண்டுபிடித்து விடலாம்.
 • L.P.A என்ற முறையில் 2-3 நாட்களில் கண்டுபிடித்து விடலாம்.
காசநோய் பரவாமல் தடுக்க என்ன செய்யலாம்?
 • இருமல், தும்மல் வரும் போது வாயைத் துணியால் மூட வேண்டும்.
 • காசநோய் அறிகுறிகள் உள்ளவர்கள் முறையான பரிசோதனை, சிகிச்சை பெற வேண்டும்.
 • கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.

 • குழந்தைகளுக்கு பிசிஜி தடுப்பூசி போட வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்