பெண்களின் அடி வயிறு பருமனாவதால் ஏற்படும் அபாயம்

Report Print Givitharan Givitharan in நோய்

பெண்களின் இடுப்பிற்கு அண்மையில் காணப்படும் அடி வயிறு பருமானக மாறினால் மாரடைப்பு நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாக இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் இடுப்பு பகுதி ஆப்பிள் போன்ற வடிவமைப்பில் காணப்பட்டால் இந்த அபாயம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த சந்தர்ப்பத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு ஆண்களை விடவும் பெண்களுக்கு அதிகமாக காணப்படும்.

அதாவது பெண்களில் 18 சதவீதமும், ஆண்களில் 6 சதவீதமும் மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் இருக்கின்றது.

George Institute for Global Health நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களே இந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

இதற்காக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 500,000 பேர் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 40 தொடக்கம் 69 வயதிற்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்