கடுமையான மூட்டு வலி இருக்கா? தயவுசெய்து இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்

Report Print Printha in நோய்
482Shares
482Shares
ibctamil.com

ஆர்த்ரிடிஸ் என்பது மூட்டு இணைப்புகளில் உள்ள அழற்சி மற்றும் வீக்க நிலை ஆகும். இந்த பிரச்சனை இருப்பவர்கள் அன்றாடம் சா[ப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இல்லையெனில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை தீவிரமாவதோடு, உடல் பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பல உடல்நலக் கோளாறுகளினால் அவஸ்தைப்படக்கூடும். அப்படி சாப்பிடக் கூடாத உணவுகள் இதோ,

காய்கறிகள்

கத்திரிக்காய், தக்காளி, குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் போன்றவை ஆரோக்கியமான காய்கறிகளாக இருந்தாலும், இவற்றை ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

இறைச்சி

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு 1-2 முறை இறைச்சியை சாப்பிடலாம். ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், இறைச்சியில் உள்ள ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் மூட்டு இணைப்புக்களில் உள்ள வலி மற்றும் வீக்கத்தை தீவிரமாக்கிவிடும்.

வறுத்த உணவுகள்

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை கட்டாயம் சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். அதுவும் முக்கியமாக வெஜிடேபிள் ஆயிலில் பொரிக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது எலும்பு மூட்டுகளில் உள்ள அழற்சியை அதிகமாக்கிவிடும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சிலவகை உணவுகள் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க கெமிக்கல்கள் பயன்படுத்தி பதப்படுத்தப்படுத்தப்பட்டு வைத்திருக்கும். அத்தகைய உணவுகளை உட்கொண்டால், அவை உடலினுள் உள்ள அழற்சியைத் தூண்டி, ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை தீவிரமாக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் உள்ள புரோட்டீன்கள் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களது நிலைமையை மோசமாக்கிவிடும். அதுவும், மூட்டு இணைப்புக்களைச் சுற்றியுள்ள திசுக்களை எரிச்சலூட்டி மூட்டு பிரச்சனையை தீவிரமாக்கும்.

இனிப்பு பானங்கள்

இனிப்பு மற்றும் குளிர் பானங்களில் நம் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் சர்க்கரை, நிறமூட்டிகள் மற்றும் இதர கெமிக்கல்கள் போன்றவை உள்ளது. இவை மூட்டுக்களில் ஏற்பட்ட அழற்சியை தீவிரமாக்கும்.

காபி

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை இருந்தால், அவர்கள் காபி குடிக்கவே கூடாது. ஏனெனில் அது உடலில் அமில அளவை அதிகரித்து, மூட்டுக்களில் உள்ள அழற்சியை மோசமாக்கிவிடும்.

ஆல்கஹால்

ஆல்கஹால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோம, ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களின் நிலையை மோசமாக்கும். எனவே எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் கொண்டவர்கள், வலி தீவிரமாகாமல் இருக்க வேண்டுமானால் ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

கோதுமை

க்ளுட்டன் மற்றும் கோதுமை இரண்டுமே அழற்சியை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக க்ளுட்டன் சகிப்புத்தன்மை மற்றும் ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள் இருந்தால், கோதுமை மற்றும் க்ளுட்டன் உணவுப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

உப்பு உணவுகள்

உப்பு அதிகம் நிறைந்த ஊறுகாய், கருவாடு போன்றவற்றை மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைக் கொண்டவர்கள் சாப்பிடக் கூடாது. இல்லையெனில் அவை மூட்டு இணைப்புக்களில் உள்ள அழற்சி அல்லது வீக்கத்தை தீவிரப்படுத்தும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்