நீண்ட நாள் ஆறாமல் வாய்ப்புண் உள்ளதா? சாதாரணமாக விடாதீர்கள்

Report Print Printha in நோய்

ஊட்டச்சத்துக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, இரைப்பையில் புண், குடலில் அழற்சி, ரத்தச்சோகை, நீரிழிவு, பல், ஈறு கோளாறுகள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய்த்தொற்று போன்ற காரணங்களினால் வாயில் புண் பிரச்சனை ஏற்படுகிறது.

வாய்ப்புண் வருவதற்கு ஒவ்வாமையும் ஒரு காரணம் தான், அதுவும் உணவு ஒவ்வாமை அதிலும் குறிப்பாக, செயற்கை உணவுகள், மருந்து ஒவ்வாமை, பற்பசை ஒவ்வாமை போன்றவற்றை காரணமாக கூறலாம்.

நீண்ட நாள் வாய்ப்புண் என்ன நோய்?

வாய்ப்புண் வெகு நாட்களுக்கு ஆறாமல் இருந்தால் புற்றுநோயாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது, எனவே வாய்ப்புண் வந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது.

யாருக்கெல்லாம் வாய்ப்புண் வரும்?

  • அடிக்கடி ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், மற்றும் அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் ஆகியோருக்கு வாய்ப்புண் பிரச்சனை நிரந்தரத் தொல்லையாக இருக்கும்.

  • வலிப்பு நோய் மாத்திரைகள் போன்ற சில மருந்துகளின் பக்கவிளைவு காரணமாகவும் வாய்ப்புண் வருவது உண்டு.

  • திடீரென உடல் எடையைக் குறைத்தாலும் வாய்ப்புண் வர வாய்ப்புள்ளது.

வாய்ப்புண்ணை குணமாக்கும் உணவுகள்?

பால், தயிர், முட்டை, இறைச்சி, ஈரல், மீன், நண்டு, கீரை, பச்சை இலைக் காய்கறிகள், வெல்லம், தேன், பேரீச்சை, முளைகட்டிய பயறுகள், கொண்டைக்கடலை, பச்சைப்பட்டாணி, கோதுமை, கேழ்வரகு, சோயாபீன்ஸ், தக்காளி, முருங்கைக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டால் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக வாய்ப்புண் ஏற்படுவதை தடுக்கலாம்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்