இந்த சிறிய அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்

Report Print Deepthi Deepthi in நோய்

பெண்களுக்கு இளம் வயதிலே மாரடைப்பு மற்றும் இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, இளவயது மெனோபாஸ், அதிக மன அழுத்தம் போன்றவை முதன்மைக் காரணமாக உள்ளது.

அதிலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு, நெஞ்சில் வலி ஏற்படுதல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை மட்டும் தான் அறிகுறிகள் என்பது கிடையாது. மறைமுகமாக தோன்றும் ஒரு சில சிறிய அறிகுறிகளும் உள்ளது.

உடலும், மனமும் சேர்ந்து களைத்துப்போவதால் அடிக்கடி பலவீனமாவார்கள்.

அலட்சியப்படுத்தக் கூடாத சிறிய அறிகுறிகள்?
  • காய்கறி நறுக்குவது, துணிகளை மடிப்பது போன்ற சிறிய வேலைகள் செய்யும் போது கூட அதிக களைப்பு அல்லது ஒருவித அசௌகரியத்தை உணர நேரிட்டால், அதை அலட்சியப்படுத்தக் கூடாது.
  • அதிக உடற்பயிற்சி, உடலுழைப்பு மற்றும் மெனோபாஸ் போன்ற காரத்தினால் உடலில் வியர்வை ஏற்படுவது இயல்பானது. ஆனால் எந்தக் காரணங்களுமே இல்லாமல் திடீரென வியர்ப்பது ஆபத்தானது.
  • கடினமான வேலைக்கு பின் மூச்சு வாங்குவது இயல்பு தான். ஆனால் அப்பிரச்சனை நீண்ட நேரத்திற்கு தொடர்வது அல்லது படுத்துக் கொண்டிருக்கும் போது மூச்சு முட்டுதல் போன்று உணர்வுகள் மிகவும் ஆபத்தானவை.
  • திடீரென நெஞ்சு பாரமாக அழுத்துவது போன்ற உணர்வு, தூக்கமின்மை, உடலில் ஏற்படும் சாதாரண வலி, குறிப்பாக தோள்பட்டையில் ஏற்படும் வலி போன்ற அறிகுறிகளை எப்போதும் அலட்சியப்படுத்தக் கூடாது.
  • இரவுநேர தூக்கத்தில் ஏற்படும் உடல் வலி, தாடைப் பகுதியில் உணர்கிற வலி மற்றும் மேல் முதுகு வலி போன்ற முக்கிய மூன்று அறிகுறிகளை அடிக்கடி உணர்ந்தால், உடனே இதயப் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers